Karthigai Deepam: மாட்டிகிட்ட மகேஷ்! கத்திக்குத்து வாங்கிய மயில்வாகனம் - விறுவிறுக்கும் கார்த்திகை தீபம்
கார்த்திக்கிடம் மாயாவும், மகேஷும் மாட்டிக்கொண்ட நிலையில் மயில்வாகனம் கத்திக்குத்துக்கு ஆளாகி இன்று கார்த்திகை தீபம் விறுவிறுப்பான எபிசோடுடன் நகரப்போகிறது.

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி ஜீ தமிழ். இதில், திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
முகத்தை மறைத்து நிற்கும் மயில்வாகனம்:
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மாயா சாமுண்டீஸ்வரியிடம் இருந்து 2 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, கார்த்திக் மற்றும் மயில்வாகனம் என இருவரும் மாயாவை வர சொன்ன இடத்திற்கு வந்து விடுகின்றனர். கார்த்திக் தூரத்தில் மறைந்திருக்க மயில் வாகனம் முகத்தை மறைத்தபடி நிற்கிறான்.
மகேஷை பிடிக்கும் மயில்வாகனம்:
அதே போல் மாயா மற்றும் மகேஷ் என இருவரும் முகத்தை மறைத்தபடி வருகின்றனர். இருவருக்கும் எதிரில் இருப்பது யார் என்ற குழப்பம் உருவாகிறது.
பிறகு மாயா பணத்தை கொடுத்த மயில் வாகனம் அதை வாங்கி கொண்டு மகேஷின் முகத்திரையை கிழித்து அவனை பிடிக்கிறான். இந்த சூழலில் மாயா மயில் வாகனத்தை கத்தியால் குத்தி விட்டு இருவரும் சேர்ந்து தப்பிக்கின்றனர்.
கத்திக்குத்துக்கு ஆளான மயில்வாகனம்:
கார்த்திக் அவர்களை பிடிக்க முயற்சி செய்ய முடியாமல் போகிறது, மயில் வாகனம் கத்தி குத்துடன் விழ கார்த்திக் அவனை ஹாஸ்பிடல் அழைத்து செல்ல கிளம்ப, மயில்வாகனத்தை இப்போ உங்க உயிர் முக்கியம் என ஹாஸ்பிடல் அழைத்து வருகிறான்.
பிறகு கம்பி குத்தி காயம் ஏற்பட்டதாக சொல்லி குடும்பத்தாரை சமாளிக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.