தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் காளியம்மன் ஏற்பாடு செய்த ஆட்கள் சாமுண்டீஸ்வரி சந்தித்து பேசிய நிலையில், இன்று நடக்கப் போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.  

Continues below advertisement

நகை ட்ராக்:

அதாவது நகை குறித்து அவர்கள் சொன்ன விஷயத்தை கேட்டு சாமுண்டீஸ்வரி உத்வேகம் அடைந்து, ஊர் மக்களிடம் எடுத்துச் சொல்வதாக சொல்ல கார்த்திக்கு இவர்கள் மீது சந்தேகம் உருவாகிறது. இதனால் இன்ஸ்பெக்டர் சரணிடம் என்னுடைய நகையை ட்ராக்கர் வச்சு கொடுக்கிறேன். இதை அவங்க கிட்ட குடுங்க, அவங்க கிட்ட கொடுங்க தப்பிச்சு ஓடுனா கூட அந்த ட்ராக்கர் வச்சு கண்டுபிடிச்சிடலாம் என்று சொல்கிறான். 

Continues below advertisement

அலறும் அர்னால்ட்:

இதைத்தொடர்ந்து, அர்னால்ட் வீட்டில் எனக்கு சுடு தண்ணி வேண்டும் என்று சொல்ல கொதிக்கும் தண்ணீரை பாத்ரூமில் கொண்டு போய் வைத்துவிட்டு சூடு தாங்காமல் தவிக்கிறான்.  ஆனாலும் ரேவதிக்கு எதுவும் தெரியக்கூடாது என சமாளிக்கிறான்.  கார்த்திக் மற்றும் மயில்வாகனம் என இருவரும் சேர்ந்து அர்னால்டை கலாய்த்து விடுகின்றனர்.  

அடுத்த நாள் அந்த நகை பிசினஸ் குறித்து கடை திறப்பு விழா நடக்க சாமுண்டீஸ்வரி அந்த ஆபீஸ் திறந்து வைத்து அவர்களுக்கு சப்போர்ட் செய்ய மக்கள் எல்லோரும் தங்களது நகையை அவர்களிடம் கொடுக்கின்றனர். 

இப்படியான நிலையில் அடுத்து நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்.