தமிழில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி ஜீ தமிழ். இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். திங்கள் முதல் சனி வரை இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபத்தில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.
கார்த்திக்கிடம் சிக்கும் மாயா:
அது மாயாவின் போட்டோ என அறியும் கார்த்திக், மாயா மீது மேலும் சந்தேகம் கொள்கிறான். மறுபக்கம் மாயா, மகேஷிடம் கருத்தடை மாத்திரைகள் தீர்ந்து விட்டது. ஒழுங்கா ரேவதியை கல்யாணம் பண்ற வேலைய பாரு? என எச்சரிக்கிறாள்.
அடுத்ததாக கார்த்திக் மாயா வீட்டிற்கு வந்து அவர்களிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே, வீடு முழுவதும் நோட்டமிட கார்த்தி கையில் ஒரு மாத்திரை ஸ்ட்ரிப் கிடைக்கிறது. மெடிக்கல் ஷாப்புக்கு கொண்டு வந்து விசாரிக்கும் போது அது கருத்தடை மாத்திரை அட்டை என தெரிய வருகிறது.
அம்மாவான ரேவதி?
இந்த பக்கம் ரேவதிக்கு ஒரு போன் கால் பண்ற அவள் உடனே வருவதாக சொல்லி கிளம்பி செல்கிறாள். கார்த்திக்கிற்கு மாயாவை ஒரு முறை ஹாஸ்பிடலில் பார்த்த ஞாபகம் வருகிறது. ஆனால், அப்போது மாயா தலைவலி காரணமாக ஹாஸ்பிடலுக்கு வந்ததாக சொன்னதையும் கார்த்தி நினைத்து பார்க்கிறான்.
இதைத் தொடர்ந்து ரேவதி ஒரு ஆசிரமத்திற்குச் சென்று அங்கு தீபா என்ற குழந்தையை பார்க்கிறாள். அந்த குழந்தை ரேவதி பார்த்ததும், அம்மா உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன் என்று சொல்லி கட்டியணைத்து அன்பை பரிமாறுகிறாள். இன்னும் பத்து பதினஞ்சு நாள்ல உன்ன என் கூடவே கூட்டிட்டு போயிட்டேன் என்று ரேவதி அந்த குழந்தைக்கு வாக்கு கொடுக்கிறாள்.
அடுத்து நடக்கப்போவது என்ன?
குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி விட்டு தூங்க வைக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.