தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ரேவதி கார்த்தியை கட்டியணைத்து திருமணநாள் வாழ்த்துக்கள் சொன்ன நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அம்மாவுக்கு சவால் விட்ட மகள்:

அதாவது ரேவதி கேக் வெட்டி கல்யாண நாளை கொண்டாட ஏற்பாடு செய்திருக்க சாமுண்டீஸ்வரி உனக்கு விவாகரத்துக்கு அப்ளை பண்ணி இருக்கும்போது இதெல்லாம் எதுக்கு? பிரிய போற நீ எதுக்கு கல்யாண நாளை கொண்டாடணும் என்று கேள்வி கேட்கிறாள். ரேவதி அதற்கு பதிலடி கொடுக்க கார்த்திக் கூடிய சீக்கிரம் இந்த குடும்பத்தை சேர்த்து வைப்பேன் என்று சவால் விட சாமுண்டீஸ்வரி கடுப்பாகி நகர்கிறாள். 

குழப்பத்தில் ரேவதி: இதைத்தொடர்ந்து ரேவதிக்கு பைக் ஷோரூமில் இருந்து போன் செய்து பைக் ரெடியாகி விட்டதாகவும் டெலிவரி எடுத்துக் கொள்ளும்படி சொல்ல கார்த்திக் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது என்று சொன்னதால் எப்படி அதை மீறி வெளியே செல்வது என குழப்பத்துடன் இருக்கிறாள். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.