தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ரேவதியை ரவுடிகள் பின்தொடர்ந்து வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
குழப்பத்தில் சிவனாண்டி:
அதாவது, கார்த்திக் ரவுடிகளை எச்சரித்து சிவனாண்டிக்கு போன் போட்டு எச்சரிக்க அவன் குழப்பம் அடைகிறான். பிறகு சிவனாண்டிக்கு போன் செய்து எச்சரிக்க சிவனாண்டி நான் எதுவும் பண்ணலையே என யோசிக்கிறான். இதைத்தொடர்ந்து மயில்வாகனம் ஓட்டல் திறப்பு விழா நடைபெறுகிறது. ஓட்டலுக்கு சாமுண்டீஸ்வரி பெயரை சூட்டி இருக்க சாமுண்டீஸ்வரி ஆச்சரியம் அடைகிறாள்.
சர்ப்ரைஸ் தரச் சென்ற ரேவதி:
பிறகு ரேவதியை தனியாக எங்கும் போகாதே என கார்த்திக் சொல்ல ரேவதி சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக வெளியே கிளம்பி செல்கிறாள். சித்தர் திருமண நாள் வரை ரேவதியை தனியாக விட வேண்டாம் என்றும், குறிப்பாக திருமண நாளில் ரேவதிக்கு கண்டம் இருப்பதால் அவளை தனியாக விட வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த சூழலில், ரேவதி சர்ப்ரைஸ் தருவதற்காக யாருக்கும் தெரியாமல் தனியாகச் சென்றதால் கார்த்திக் உச்சகட்ட பதற்றம் அடைகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
