Karthigai Deepam: தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி ஜீ தமிழ் தொலைக்காட்சி. திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு இதில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மாயா தப்பித்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கார்த்தியை கொஞ்சிய ரேவதி:
மாயா தப்பித்த விஷயம் கார்த்திக் தெரிய வருகிறது. அதைத்தொடர்ந்து சாமுண்டீஸ்வரி வீட்டில் கார்த்தியுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை பார்த்து ரசித்தபடி ரேவதி இருக்கிறாள். மேலும் அந்த போட்டோவை பார்த்து கார்த்தியை கொஞ்சிக் கொண்டிருக்க, ரூமுக்கு வந்த கார்த்திக் இதை பார்த்து ரேவதியிடம் சத்தம் போடுகிறான். எதுக்கு இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க? என்று கோபப்படுகிறான்.
இதை பார்த்துவிட்ட மயில்வாகனம் கார்த்தியிடம் எதுக்கு இப்படி கோபப்படுற? என்று கேட்க, ரேவதி செய்ததெல்லாம் பார்த்து என்ன பண்றதுன்னு தெரியல என்று கார்த்திக் சொல்கிறான். சரிப்பா அந்த பொண்ணை சமாதானப்படுத்தலாம் என்று ரூமுக்கு அழைத்துச் செல்ல அங்கு ரேவதி இல்லை என்பது தெரிய வருகிறது.
முதல் முறையாக காதலைச் சொன்ன கார்த்திக்:
ரேவதி பரமேஸ்வரி பாட்டி ரூமுக்கு வந்து படுத்து விட்ட நிலையில், கார்த்திக் அங்கு வந்து அவளை சமாதானம் செய்து அழைத்துச் செல்கிறான். பிறகு ரேவதி தூங்கும் போது கார்த்திக் அவரது பக்கத்தில் உட்கார்ந்து எனக்கும் உன்னை பிடிக்கும். ஆனா என்னுடைய உயிருக்கு ஆபத்து இருக்கு என்று மனதுக்குள் இருக்கும் விஷயத்தை முதல் முறையாக வெளிப்படுத்துகிறான்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இன்றைய எபிசோடில் காணலாம்.