தமிழில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் சந்திரகலா கார்த்திக்கை சிக்க வைக்க திட்டமிட்டு கோவிலை பூட்ட வைத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன?என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கோயிலுக்காக ஒப்புக்கொள்ளும் வாரிசுகள்:
அதாவது, அபிராமியின் வாரிசுகள் வந்து கையெழுத்து போட்டா தான் கோவிலை திறக்க முடியும் என்ற சூழ்நிலையை சந்திரகலா உருவாக்குகிறாள். பரமேஸ்வரி பாட்டி மூலமாக இந்த விஷயம் அறியும் கார்த்திக் கோவிலுக்காக நானும் அண்ணன்களும் வந்து கையெழுத்து போடுகிறோம் என்று ஒப்புக்கொள்கிறான்.
இதைத்தொடர்ந்து சந்திரகலா சாமுண்டீஸ்வரியிடம் இப்படி ஒரு விஷயம் நடக்கப் போகுது, ஊர் தலைவர் என்ற முறையில் இந்த விஷயத்தில் நீயும் கலந்து கொள்ள வேண்டும் என்று ஏற்றி விட அவளும் கோவிலுக்கு வர சம்மதிக்கிறாள்.
உண்மையை உடைக்கப்போகும் கார்த்திக்:
சாமுண்டீஸ்வரியின் வருகையால் கார்த்திக் கோவில் விஷயத்தில் பொய் சொல்ல உடன்பாடு இல்லை என்பதால் அபிராமியின் வாரிசுகளில் நானும் ஒருவன் தான் என்ற உண்மையை உடைக்க முடிவெடுக்கிறான்.
மேலும் இது குறித்து மயில்வாகனம், ராஜராஜன் ஆகியோரிடம் சொல்ல ராஜராஜன் இப்போதைக்கு உண்மையை சொல்ல வேண்டாம். கொஞ்சம் பொறுமையா இருங்க மாப்பிள்ளை என்று அறிவுரை வழங்குகிறார்.
என்ன நடக்கும்?
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்.