தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வர இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் மயில்வாகனம் மற்றும் கார்த்திக் ஹோட்டல் கடை திறப்பது குறித்து பேச சிவனாண்டி ஒட்டு கேட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Continues below advertisement

கார்த்திக்கிற்கு பைக்:

அதாவது, சிவனாண்டி சந்திரகலாவை சந்தித்து மயில்வாகனம் ஓட்டல் கடை திறக்கும் விஷயத்தை சொல்கிறான். மறுபக்கம் ரேவதி ரோகினி ஆகியோர் பைக் ஷோரூம் கல்யாண நாளை கொண்டாடுவதற்காக கார்த்திக்கு ஒரு கிப்ட் கொடுக்க பைக் வாங்க பார்க்கின்றனர்.  இறுதியாக ஒரு பைக்கை தேர்வு செய்ய அது அடுத்த மாதம் தான் டெலிவரி கிடைக்கும் என்று சொல்ல, ரேவதி கல்யாண நாளுக்காக தான் இந்த பைக்கை வாங்குவதாகவும் உடனடியாக டெலிவரி தேவை எனவும் கேட்க கடையில் சீக்கிரம் டெலிவரி செய்ய முயற்சி செய்வதாக சொல்கின்றனர். 

ஏற்றிவிடும் சந்திரகலா:

மறுபக்கம் வீட்டுக்கு வந்தேன் சந்திரகலா சாமுண்டீஸ்வரியிடம் மயில்வாகனம் ஹோட்டல் கடை திறக்கப்படும் விஷயத்தையும், அதற்கு கார்த்திக் உதவி செய்யும் விஷயத்தையும் சொல்லி போட்டு கொடுக்கிறாள். இதை இப்படியே விட்டா கார்த்திக் ஒவ்வொருத்தரா அவன் பக்கம் இழுத்துருவான் என ஏற்றி விடுகிறாள். 

Continues below advertisement

பிறகு ரேவதி ஒரு துணி கடைக்கு வர அங்கு ட்ரையல் ரூமில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டு இருப்பதை பார்த்து விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.