தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் சனிக்கிழமை எபிசோடில் சந்திரகலா தீக்குளிக்க முயற்சி செய்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Continues below advertisement

சாமுண்டீஸ்வரி கண்டிஷன்:

அதாவது, சாமுண்டீஸ்வரி சந்திரகலாவை தடுத்து நிறுத்தி, நான் சொல்ற பேச்சை கேட்கிறதா இருந்தா, இந்த வீட்டில் இரு என்று சொல்கிறாள். அடுத்த நாள் பஞ்சாயத்தை கூட்டி வாழ்நாள் முழுவதும் சிவனாண்டி சந்திரகலா சேர முடியாதபடி பிரித்து விட சொல்கிறாள். 

இதைக் கேட்டு சிவனாண்டி அதிர்ச்சி அடைய சந்திரகலா மறுப்பு சொல்ல முடியாமல் நிற்கிறாள். பிறகு பஞ்சாயத்தில் பிரிந்து விட சம்மதமா என்று கேட்க, சந்திரகலாவும் சம்மதம் சொல்ல சிவனாண்டி இல்ல சந்திரகலாவை மிரட்டி தான் இப்படி சொல்ல வச்சிருக்காங்க என்று சத்தம் போடுகிறான். 

Continues below advertisement

தாலியை கழட்டிய சந்திரகலா:

ஆனால் சந்திரகலா வேறு வழியில்லாமல் என்னை யாரும் மிரட்டி சொல்ல வைக்கல எனக்கு அவரோட சேர்ந்து வாழ விருப்பமில்லை என்று சொல்லி தாலியை கழட்டி கொடுக்க ரேவதி தனக்கு நடந்த விஷயங்களை நினைத்து பார்க்கிறாள். பிறகு வீட்டுக்கு வந்தவர்கள் கார்த்திக் குறித்து பேசி சாமுண்டீஸ்வரிக்கு புரிய வைக்க முயற்சி செய்ய சாமுண்டீஸ்வரி கார்த்திக்கை ஏற்க மறுக்கிறாள்.

யார் அந்த சிவனாண்டி?

ஒரு கட்டத்தில் கார்த்திக் அம்மாவோட மரணத்துக்கும், எங்க தாத்தாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை நிரூபிப்பேன். மாமாவ கூட்டிட்டு போய் கும்பாபிஷேகத்தை நடத்துவேன் என சவால் விடுகிறான். பிறகு ராஜராஜன் சந்திரகலாவுக்கு சிவனாண்டிக்கும் எப்படி திருமணம் நடந்தது? யார் அந்த சிவனாண்டி என்ற உண்மைகளை சொல்கிறார். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணலாம்.