தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் நவீன் கார்த்தியை தொடர்பு கொண்டு, உயிருடன் புதைக்கப்பட்ட விஷயத்தை சொன்ன நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
நவீனைத் தேடும் கார்த்திக்:
அதாவது, நவீன் கார்த்தியிடம் பக்கத்தில் ஒரு கோவில் மணி சத்தம் கேட்பதாக சொல்ல கார்த்திக் அதை வைத்து நவீனை தேட தொடங்குகிறான். ஃபேக்டரி அருகே இருக்கும் கோவிலுக்கு வந்து அங்கிருக்கும் கோவிலில் மணி இருக்கிறதா என்று விசாரிக்க இல்லை என தெரிய வருகிறது.
அடுத்ததாக மீண்டும் நவீனுக்கு போன் செய்து உனக்கு இதுக்கு முன்னாடி வந்த போன் காலில் என்ன பெயர் சொன்னாங்க என்று கேட்கிறான். பிறகு இந்த பெயரையும் நம்பரையும் வைத்து அட்ரஸை கண்டுபிடித்து அங்கு சென்று விசாரிக்க ரவுடியின் மனைவி அவர் வீட்டில் இல்லை என்று சொல்கிறாள்.
நவீன் மரணம்:
பிறகு சரக்கடித்து மட்டையான ரவுடியை கண்டுபிடித்து உன் போன் எங்கடா என்று விசாரிக்க அவன் என் போன் எங்கன்னு தெரியல என்று சொல்கிறான். சந்திரகலாவுக்கு விஷயம் தெரிய வர அவன் உடனடியாக அந்த போனை பிளாக் செய்ய சொல்கிறாள். மேலும் துர்காவுக்கு நவீன் இறந்து விட்டதாக தகவல் கொடுக்க சொல்கிறாள்.
துர்கா தற்கொலை முயற்சி:
துர்காவுக்கு நவீன் இறந்து விட்டதாக தகவல் கிடைக்க அவள் அதிர்ச்சி அடைகிறாள். நேராக சாமுண்டீஸ்வரி வீட்டுக்கு வந்த துர்கா கோவப்பட்டு இனிமே நான் உயிரோட இருக்க மாட்டேன் என்று சொல்லி பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுகிறாள். இதனால் எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.