பிக்பாஸ் தமிழின் 9 ஆவது சீசன் 10 ஆவது நாளை எட்டியுள்ளது. ஒருபக்கம் போட்டியாளர்களிடையே பல வித பிரச்சனைகள் இருந்து வருகின்றன. என்றாலும் ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு காதல் ஜோடி பிக்பாஸ் வீட்டில் உருவாகும் . அந்த வகையில் இந்த சீசனில் அரோரா மற்றும் துஷார் , எஃப்ஜே ஆதிரை என இரு ஜோடிகள் காதல் விளையாட்டுக்களை தொடங்கியுள்ளார்கள்கள். குறிப்பாக மாடலான அரோரா 2கே கிட்டான துஷாரை லுக்கு விட்டு வருகிறார். அந்த வகையில் இருவருக்குமான தனிப்பட்ட உரையாடலால் பார்வையாளர்கள் கடுப்பாகியுள்ளார்கள். 

Continues below advertisement

அரோரா துஷார் கிசுகிசு பேச்சு

பிக்பாஸ் வீட்டில் வந்த மூன்றாவது நாளே துஷார் அரோராவிடம் வெளியே சென்றதும் இருவரும் டேட் போகலாமா என கேட்டதாக அரோரா தெரிவித்துள்ளார். முதல் நாள் தொடங்கியே இருவருக்கும் இடையில் நல்ல கெமிஸ்ட்ரி இருந்து வருகிறது. நாளுக்கு நாள் துஷாரிடம் பேசும் விதத்திலும் பழகும் விதத்திலும் அரோரா நெருக்கம் காட்டி வருகிறார். அந்த வகையில் நேற்று இரவு இருவரும் பேசிக்கொண்டிருந்த போது துஷார் மேலே உட்கார்ந்திருக்க அரோரா அவருக்கு கீழே உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அவர் எதார்த்ததாம " how is the view" என்று கேட்க துஷார் உடனே கொழுப்பா என்று கண்டிக்கும் தொனியில் கேட்கிறார். உடனே அரோரா நான் நீச்சல் குளத்தை சொன்னேன் என்று அரோரா சொல்கிறார். உடனே துஷார் அதுவா சின்னதா இருக்கு என்று கூற அரோரா முகம் சுருங்கிப் போகிறது. சிறிது நேரம் கழித்து துஷார் பெருசா இருக்கு என்று துஷார் சொல்கிறார். இந்த உரையாடல் பார்வையாளர்களை அசெளகரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது. மைக்கில் கேட்கும் என்று தெரிந்தும் அந்தரங்கமான உரையாடலை இருவரும் நேரடியாக பேசிக்கொண்டதை பலரும் விமர்சித்து வருகிறார்கள்.