தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். 

Continues below advertisement

நம்பிக்கை தந்த கார்த்திக்:

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் சுவாதி மீது எந்த தவறும் இல்லை என நிரூபித்து அவளை வெளியே கொண்டு வருகிறார். இந்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, ஒரு பக்கம் கச்சேரியில் கிருஷ்ணனின் மகள் பாடிக் கொண்டிருக்க சுவாதி என்னை எப்படியும் இந்த நிகழ்ச்சியில் சேர்த்துக்க மாட்டாங்க என்று வருத்தப்பட கார்த்திக் அப்படியெல்லாம் இல்லை நீ உன்னுடைய திறமை மேல நம்பிக்கை வச்சு பாடு என சொல்கிறான். 

Continues below advertisement

சுவாதியை விரட்ட சந்திரகலா ப்ளான்:

அதன் பிறகு சுவாதி நல்லபடியாக பாடி முடித்து வெற்றியும் பெறுகிறாள். இதை எல்லாம் வீடியோவாக எடுத்த முத்துவேல் அதை சந்திரகலாவுக்கு அனுப்பி வைக்க இதை வைத்து அவன் வீட்டை விட்டு வெளியே துரத்த திட்டம் போடுகிறாள். 

கார்த்திக், ரேவதி வீட்டுக்கு வந்த சுவாதிக்கு ஆரத்தி எடுத்து வரவேற்க மந்திர கலா என்ன விஷயம் என்று கேட்க சும்மாதான் என்று சொல்கிறார்கள். பிறகு சந்திரகலா ரேவதியை தனியாக கூப்பிட்டு கார்த்தியை சிக்க வைக்கப் போவதாக சொன்ன ரேவதி அதிர்ச்சி அடைந்து சந்திரகலாவுக்கு தெரியாமல் போனை எடுத்து வீடியோ ஆதாரத்தை அழிக்கிறாள். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இன்றைய எபிசோடில் கண்டுகளியுங்கள்.