தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இன்ஸ்பெக்டர் கௌசல்யா ரேவதியை காப்பாற்றிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Continues below advertisement

உண்மையை கண்டுபிடிக்கும் கெளசல்யா:

அதாவது, ரேவதி கார்த்திக் சாமுண்டீஸ்வரி வீட்டில் நடிக்கும் விஷயதையும் அதற்கான காரணத்தையும் சொல்கிறாள். அடுத்து ரேவதி கௌசல்யாவுடன் கோவிலுக்கு வர அப்போது ஒரு பெண்ணின் தங்க தாலியை ஒரு கும்பல் அறுத்து செல்ல கௌசல்யா அதனை திறமையாக விசாரித்து உண்மையை கண்டு பிடிக்கிறார். 

இதனால் பரமேஸ்வரி பாட்டி, நீ என்ன போலீசா மா என்று கேட்க ரேவதி ஆமாம் பாட்டி, போலீஸ் தான் உங்க பேரன் கார்த்தியோட சீனியர் என்று சொல்கிறாள். அடுத்து கார்த்திக் கௌசல்யாவுக்கு போன் செய்து பாம் இருக்கும் விஷயத்தை சொல்கிறான். 

Continues below advertisement

உண்மையை சொல்வானா கார்த்திக்?

கௌசல்யா கழுத்தில் போட்டிருக்கும் ஆரத்தில் கூட இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறாள். ராஜராஜனும் அதே போல் ஆரத்தை போட்டிருக்க அதை செக்கப் செய்ய செல்கிறாள். ஆனால் ஊர் காரர்கள் கும்பாபிஷேகம் முடியும் வரை அவரை பார்க்க கூடாது என்று தடுத்து விடுகின்றனர். 

அடுத்து இங்கு வந்த கார்த்திக் கௌசல்யா, பரமேஸ்வரி பாட்டி, ரேவதி ஆகியோரிடம் பாம் இருக்கும் விஷயத்தை சொல்கிறான். மக்களின் உயிரை காப்பாற்ற நான் அத்தையிடம் உண்மையை சொல்வதை தவிர வேற வழியில்லை என்று உண்மையை சொல்ல முடிவெடுக்கின்றனர். 

இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.