தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் ரேவதியை தேடி அலைய சிவனாண்டி கார்த்தியின் குடும்ப புகைப்படத்துடன் சாமுண்டீஸ்வரியை சந்தித்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

மாயாவுக்கு பதிலடி தந்த கார்த்திக்:

அதாவது, கார்த்திக் மகேஷ் இருக்கும் ஹாஸ்பிடல் லொகேஷனை அனுப்பி வைக்க மாயா மகேஷை பார்ப்பதற்காக கிளம்பி செல்கிறாள். இந்த கேப்பில் கார்த்திக் ரேவதி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவளை உயிருடன் மீட்கிறான், மாயா கார்த்திக் அனுப்பிய லொகேஷனுக்கு வர அங்கு மகேஷ் இல்லை, அது தவறான லோகேஷன் என தெரிய வருகிறது. 

உடனே மாயா கார்த்திக்கு போன் செய்து கோபப்பட அவன் "நீயும் பொய்யான இடத்தை தானே அனுப்பின" என பதிலடி கொடுக்கிறான். பிறகு மாயாவை நேரில் சந்தித்து "எதுக்கு இப்படியெல்லாம் பண்ணிட்டு இருக்க?" என்று கேட்கிறான். 

என் மகேஷை கொடுத்துடு:

மாயா "எனக்கு என் மகேஷ் வேணும்.. பணத்துக்காக தான் ரேவதியை கல்யாணம் பண்ண பிளான் போட்டோம். எனக்கு என் மகேஷை கொடுத்துடு, நாங்க உங்க வழிக்கே வர மாட்டோம்" என்று தங்களது உறவு குறித்து பேச ரேவதி உள்ளே என்ட்ரி கொடுக்கிறாள். "பணத்துக்காகவா இப்படியெல்லாம் பண்ணீங்க?" என்று ஆவேசப்படுகிறாள். 

உண்மையை அறிந்த ரேவதி:

மகேஷ், ரேவதி கள்ளத்தொடர்பு குறித்த விஷயங்கள் மொத்தமாக ரேவதிக்கு தெரிய வருகிறது. அடுத்து இருவரும் வீட்டிற்கு வர சந்திரகலா கார்த்தியின் குடும்ப போட்டோவை தூக்கி வீசி என்ன இது என்று கேட்கிறாள். கீழே விழுந்த போட்டோ உடைந்து சிதற கார்த்திக் அதை கையில் எடுக்கிறான். 

இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.