Karthigai Deepam: சாமுண்டீஸ்வரியால் கார்த்திக் ஏமாற்றம்! ரேவதிக்கு யாருடன் கல்யாணம்? கார்த்திகை தீபத்தில் என்ன?

karthigai deepam serial: மகேஷ்தான் மாப்பிள்ளை என்று சாமுண்டீஸ்வரி சொன்னதால் கார்த்திக் ஏமாற்றம் அடைந்ததால் அடுத்து கார்த்திகை தீபம் சீரியலில் என்ன நடக்கப்போகிறது? என்பதை பார்க்கலாம்.

Continues below advertisement

karthigai deepam serial: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி அடுத்த முகூர்த்தத்தில் கல்யாணத்தை வைத்து கொள்ளாமல் என்று சொல்லிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Continues below advertisement

அதாவது அருண் ஆனந்த் ஆகியோரால் கடத்தப்பட்ட நவீனும் மண்டபத்திற்கு வந்து விடுகிறான், இதனால் மாயா சந்திரகலா ஆகியோர் அதிர்ச்சி அடைகின்றனர். கார்த்திக் நவீனை வைத்து ரேவதியின் கல்யாணத்தை நடத்தி விடலாம் என்று முடிவெடுக்கிறான். 

உண்மையை உடைத்த கார்த்திக்:

ஆனால் நவீன் துர்காவை தான், நான் ரேவதி என நினைத்திருந்ததாகவும் அவளை தான் தனக்கு பிடித்திருப்பதாகவும் சொல்ல கார்த்திக் ஷாக் ஆகிறான், இதனால் நவீன் ரேவதியை திருமணம் செய்து கொள்ள முடியாத நிலை உருவாகிறது. கார்த்திக் சாமுண்டீஸ்வரியிடம் உண்மையை சொல்ல முடிவெடுக்கிறான். 

அதற்குள் மாயா, ரேவதியிடம் சென்று அந்த ட்ரைவர் உங்க அம்மா கிட்ட போய் எனக்கும் மகேஷ்க்கும் தப்பான தொடர்பு இருப்பதாக சொல்ல போவதாக செல்கிறான் என்று சொல்ல, கார்த்தியும் சாமுண்டீஸ்வரியை சந்தித்து மகேஷ் நல்லவன் இல்லை என்று சொல்ல ரேவதி இதை ஜன்னல் வழியாக பார்த்து கார்த்திக்கை தவறாக புரிந்து கொள்கிறாள். 

ஏமாற்றம் அடைந்த கார்த்திக்;

சாமுண்டீஸ்வரி உனக்கு எங்க குடும்பத்து மேல அக்கறை இருக்கு தான், நான் அதை மறுக்கவில்லை. ஆனால் மகேஷ் தான் மாப்பிள்ளை, அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இதை இப்படியே விட்டுடு என்று சொல்ல, ரேவதி நிம்மதியடைய கார்த்திக் ஏமாற்றம் அடைகிறான். ரேவதியின் வாழ்க்கையை காப்பாற்ற அடுத்து என்ன செய்வது என யோசிக்கிறான். 

இதனை தொடர்ந்து மாயா மீண்டும் ரேவதியை சந்தித்து ட்ரைவர் பற்றி தப்பு தப்பாக சொல்லி ஏற்றி விடுகிறாள். மறுபக்கம் ராஜேஸ்வரி சாமுண்டீஸ்வரியை சந்தித்து என்னாச்சு எங்க போய் இருந்த என்று கேட்க தான் கடத்தப்பட்ட விஷயத்தை சொல்கிறாள். 

இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Continues below advertisement
Sponsored Links by Taboola