தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி ஜீ தமிழ். இந்த தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். 

கல்யாணத்தை நிறுத்தனும்:

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக், ராஜராஜனிடம் மாயா மற்றும் மகேஷ் இடையே நல்ல உறவு இல்லை என்று சொல்லிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, கார்த்திக் இப்படி சொல்வதை கேட்டு ராஜராஜன் அதிர்ச்சி அடைகிறார், கார்த்திக் இந்த கல்யாணத்தை எப்படியாவது நிறுத்தியாகணும் என்று சொல்கிறான். 

ரேவதியை காப்பாத்த ஒரே வழி:

மறுபக்கம் மாயா மற்றும் மகேஷ், அந்த கார்த்திக் திரும்பவும் வந்துட்டான்.. ஏதாவது செய்து அவனை இந்த ஊரை விட்டு துரத்தணும். கார்த்திக் ரேவதியை அடையவே கூடாது என யோசிக்கின்றனர். இங்கே மயில் வாகனம் ராஜராஜனை தனியாக அழைத்து சென்று ரேவதியோட வாழ்க்கையை காப்பாற்ற ஒரே வழி தான் இருக்கு.. இதை செய்தால் தான் இந்த குடும்பமும் ஒன்று சேரும் என்று சொல்கிறான். ராஜராஜன் என்ன விஷயம் என்று கேட்க பாட்டியை வீட்டிற்கு வந்து ரேவதியை பெண் கேட்க சொல்லுங்க. கார்த்திக் மற்றும் ரேவதிக்கு கல்யாணம் நடந்தால் ரெண்டு குடும்பமும் ஒன்னு சேரும் என சொல்கிறான். 

பெண் கேட்க வரும் பரமேஸ்வரி:

இதை கேட்ட ராஜராஜனும் அம்மாவுக்கு போனை போட்டு ரேவதியை பெண் கேட்க சொல்லி வர சொல்கிறார். பாட்டி பரமேஸ்வரி ரேவதியை பெண் கேட்டு சாமுண்டீஸ்வரி வீட்டிற்குள் நுழைகிறாள். 

சாமுண்டீஸ்வரி உங்களை யார் உள்ளே விட்டது? வெளியே போங்க என ஆவேசப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.