தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். அபிராமி உயிரிழந்த நிலையில், ராஜா தான் பாட்டியின் பேரன் என்ற உண்மையை ரேவதி அறிந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

ஆறுதல் சொன்ன ராஜராஜன்:

 சந்திரகலா, சிவனாண்டி ஆகியோர் கூட்டு சேர்ந்து கூடிய சீக்கிரம் ராஜா தான் ராஜா சேதுபதியின் பேரன் என்ற உண்மையை போட்டு உடைக்க வேண்டும் என திட்டம் போடுகின்றனர். கார்த்திக் அம்மாவை இழந்த சோகத்தில் தனிமையில் உட்கார்ந்து இருக்க அப்போது அங்கு வரும் ராஜராஜன் கார்த்திக்கு ஆறுதல் சொல்கிறார். கார்த்திக் அம்மாவின் இழப்பில் இருந்து மீண்டு வர கொஞ்சம் காலம் ஆகும் என சொல்கிறான். 

மைதிலி, தீபா அம்மாவிற்கு கட்டளையிட்ட ரேவதி:

இன்னொரு பக்கம் கார்த்திக் தான் ரேவதியின் புருஷன் என்பதை அறிந்த மைதிலியும், தீபாவின் அம்மாவும் ஊரை விட்டு கிளம்ப தயாராக ரேவதி என்னாச்சு என்று விசாரிக்கிறாள். மேலும் நீங்க எங்கயும் போக கூடாது. இங்க தான் இருக்கணும் என அன்பு கட்டளையால் ஆப் செய்து விடுகிறாள். 

அடுத்த நாள் தூங்கி எழுந்த துர்கா கழுத்தில் இருக்கும் தாலியை மறைக்க மறந்து வெளியே வந்து விட சந்திரகலா இதை பார்த்து விடுகிறாள், உடனே சாமுண்டீஸ்வரியிடம் விஷயத்தை சொல்ல ரேவதி இதை கேட்டு கார்த்தியிடம் சொல்கிறாள். 

தாலியை மறைக்கச் சொன்ன கார்த்திக்:

சந்திரகலாவும் சாமுண்டீஸ்வரியும் பாத்ரூம் கதவை தட்ட துர்கா திறக்க போகும் சமயத்தில் கார்த்திக் ரேவதி ஜன்னல் வழியாக வந்து தாலியை மறைக்க சொல்ல துர்கா தாலியை மறைத்து கொண்டு கதவை திறக்கிறாள். அதன் பிறகு ரேவதி கார்த்தியை சந்தோஷப்படுத்த தங்களது திருமண போட்டோவை பிரேம் போட போக, மாயா அவளை சந்தித்து மகேஷ் எங்க இருக்கானு சொல்லு என்று மிரட்டுகிறாள். 

இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.