Dance Jodi Dance 2: யுவன், எஸ்.ஜே.சூர்யா வெளியிட்ட டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 2 பாடல்.. இணையத்தில் வைரல்..!

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் தனி வரவேற்பு கிடைத்து வருகிறது.

Continues below advertisement

இதுவரை நீ யாரோ இனி நீதான் ஹீரோ என்ற  டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் பாடல் ன இணையத்தில் பட்டையை கிளப்பி வருகிறது. 

Continues below advertisement

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் தனி வரவேற்பு கிடைத்து வருகிறது.கடந்த வாரம் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் நடைபெற்று முடிந்தது. இதனைத் தொடர்ந்து இந்த வாரம் முதல் மக்களின் மனம் கவர்ந்த நடன நிகழ்ச்சியான  டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட்  நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது.

பல வகையான ஆடிஷன் மூலம் மொத்தம் 24 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மெகா ஆடிஷன் மூலம் இவர்களில் இருந்து 12 போட்டியாளர்கள் அடுத்த கட்டத்திற்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.ஏற்கனவே நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக இருந்து வரும் நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் பாடல் வீடியோவை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் இயக்குனரும் நடிகருமான எஸ் ஜே சூர்யா ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

இதுவரை நீ யாரோ இனி நீதான் ஹீரோ என தொடங்கும் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola