தமிழ் சினிமா உலகில் வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் ஏராளமான பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். அவர்களில் சின்னத்திரையில் பிரபலமான தம்பதிகளாக உலா வருபவர்கள் சித்து - ஸ்ரேயா. இவர்கள் இருவரும் சின்னத்திரையில் திருமணம் என்ற சீரியலில் இணைந்து நடித்து பிரபலமானவர்கள் . பின்னர், காதலித்து திருமணம் செய்து கொண்டு ரியல் ஜோடியாகி விட்டனர். 

நாளை மறுநாள் முதல் வள்ளியின் வேலன்:

அதன் பிறகு ஷ்ரேயா ரஜினி என்ற சீரியலில் நடிக்க, சித்து ராஜா ராணி 2 சீரியலில் நடித்தார். இந்த இரண்டு சீரியல்களும் முடிவுக்கு வந்து விட்டதை தொடர்ந்து தற்போதும் மீண்டும் இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர். இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜீ தமிழில் வரும் செப்டம்பர் 2ம் தேதி முதல் வள்ளியின் வேலன் தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  திருவண்ணாமலையில் சாமி தரிசனம்:

திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு இந்த மெகா தொடர் ஒளிப்பரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைய வேண்டும் என்று சித்து மற்றும் ஷ்ரேயா என இருவரும் ஜோடியாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். இது குறித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். கோயிலுக்கு வந்த பக்தர்கள் பலரும் அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.