தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அயலி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கபிலன் குரலை கேட்டதும் அயலிக்கு சந்தேகம் உருவான நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அயலி வாழ்வில் மீண்டும் வருகிறானா கபிலன்?

அதாவது, அயலி ரித்விகாவிடம் பேசுறது யாரு என்று கேட்க அவள் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் என்று அயலியை திட்டி அனுப்புகிறாள். 

இதையடுத்து அயலி மொட்டை மாடிக்கு வந்து அந்த கபிலன் திரும்பவும் என் வாழ்க்கைக்குள்ள வரானோ என்று சந்தேகமாக இருப்பதாக சொல்கிறாள். சிவா ஏன் ப்ரொபோஸ் செய்துடுவானு பயப்படுறியா என்று சிவா கேட்டு கொண்டிருக்க ஒரு கார் வந்து நிற்கிறது. 

வர்மாவின் சில்லறைத்தனம்:

இதனால், ரித்விகாவுக்கு பார்த்த மாப்பிள்ளை யார் என்று பார்க்க கீழே வர அதற்குள் கார் கிளம்பி விடுகிறது. அடுத்து அயலிக்கு உயர் அதிகாரியிடம் இருந்து போன் கால் வருகிறது, வர்மா ஒரு இடத்திற்கு வருவதாக தகவல் கிடைக்க அயலி பேண்ட் சர்டில் இங்கு கிளம்பி செல்கிறாள். 

செல்லா அயலியை பார்த்து விட்டு அவளை பின்தொடர்ந்து வருகிறாள். வர்மா ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு சாப்பாட்டில் கரப்பான் பூச்சியை போட்டு பிரச்சனை செய்கிறான். 

இதே பாருக்கு கபிலன் ரித்விகா மற்றும் சில பெண்களுடன் வர வர்மா கபிலனை பார்த்து ஷாக் ஆகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அயலி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.