Karthigai Deepam: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர்.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் முளைப்பாரி நிகழ்வு நல்லபடியாக நடந்து முடிந்ததை தொடர்ந்து இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. ஜானகி மற்றும் மைதிலி ஆகியோர் கோவிலில் இருந்து கிளம்புவதாக சொல்ல ரேவதி இருங்க என்னுடைய கணவரை டிராப் செய்ய சொல்லுறேன் என்று சொல்கிறாள். இதனால், கார்த்தியை அவர்கள் பார்த்து விடுவார்களா? என்ற எதிர்பார்ப்பு உண்டாகிறது.
அபிராமியை கடத்த ப்ளான்:
ஆனால் ஜானகி வேண்டாம் மா நாங்க ஆட்டோவில் போறோம் என்று சொல்லி கிளம்புகிறார்கள். இதையடுத்து சந்திரகலா, சிவனாண்டி ஆகியோர் ஏற்பாடு செய்த ரவுடிகள் அபிராமியை கடத்த அவளது வீட்டிற்குள் எகிறி குதிக்கின்றனர்.
அபிராமி கார்த்தியுடன் போனில் பேசி கொண்டிருக்க ரவுடிகள் உள்ளே வந்து பார்க்கின்றனர். அப்போது, அங்கு அவள் இல்லை என தெரிய வருகிறது. கார்த்தி அபிராமியை வீடு மாற சொன்னதும் தெரிய வருகிறது. வீடு மாறிய அபிராமி காரணம் கேட்க, கார்த்திக் அந்த வீட்டில் இப்போதைக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்கிறான்.
சாமியார் கடத்தல்:
அடுத்து இந்த திட்டம் தோல்வியை தழுவ அதன் பிறகு குறி சொல்ல இருந்த சாமியாரை கடத்தி வேறொரு ஆளை சாமியாராக ஏற்பாடு செய்கின்றனர். ராஜராஜன் குறி கேட்கும் போது அவனை வெட்ட சொல்கின்றனர்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.