தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அயலி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அயலி ஆண்டனியை துப்பாக்கி முனையில் வைத்து உண்மையை சொல்ல சொல்லி மிரட்டிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அப்செட்டான அயலி:

அதாவது போலீஸ் சம்பவ இடத்திற்கு வர அயலி மற்றும் சிவா அங்கிருந்து தள்ளிப் போய் விடுகின்றனர். பிறகு போலீஸ் ஆண்டனியை பிடித்து வர்மா பற்றி உண்மையை சொல்ல சொல்லி விசாரிக்க அவன் சொல்ல முடியாது என மறுக்க அயலி அப்செட் ஆகிறாள். 

இதையடுத்து அயலி, சிவா ஆகியோர் தர்பூசணி சாப்பிடச் செல்ல அப்போது அங்கு ஒரு போட்டோவை பார்க்கின்றனர். அந்த போட்டோவில் சிவாவின் அப்பா கையில் இருந்த மோதிரம் போலவே, இருக்க அந்த போட்டோவை காட்டி அக்கம் பக்கத்தில் விசாரிக்கின்றனர். 

அந்த போட்டோவில் மூன்று பேர் இருக்க ஒரு ஆட்டோ டிரைவரிடம் விசாரிக்கும் போது அதில் ஒருவர் இறந்து விட்டதாகவும் இன்னொருத்தர் இருக்கும் முகவரி தெரியும் என்று சொல்லிக் கொடுக்க அவரை பார்க்க கிளம்புகின்றனர். 

கல்யாணத்துக்கு மறுத்த பாட்டி:

சிவா உனக்கு ஒரு பெரிய பிரச்சனை காத்துகிட்டு இருக்கு.. இப்போ வீட்ல என்ன சொல்ல போற என்று கேட்க அடுத்து, அயலி வீட்டுக்கு வர ஜமுனா எங்க போன என்று நிற்க வைத்து கேள்வி கேட்கிறாள். அயலி பதில் இல்லாமல் நிற்க பாட்டி நான் தான் போக சொன்னேன்.. எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்லை என்று சொல்கிறார். 

தேவராஜ் உன் பொண்ணுக்கு இப்படி ஒரு மாப்பிள்ளை பார்த்து வைப்பியா? என்று சத்தம் போட ஜமுனா வீட்டை விட்டு கிளம்ப தயாராகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அயலி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.