தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அயலி. 

Continues below advertisement


இந்த சீரியலில் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் சிவா அயலிக்காக தனது அம்மாவின் புடவை ஒன்றை கொடுக்க அதை ரித்திகா வீட்டில் போட்டுக் கொடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


புடவையை எரித்த அயலி:


அதாவது எல்லோரும் ஒன்று சேர்ந்து அயலியை திட்டி அந்த புடவையை தூக்கிப்போட்டு எரிக்க சொல்கின்றனர். இதனால் அயலி வேறு வழியில்லாமல் அந்த புடவையை எரித்து விட்டு மேலே சென்று கண்கலங்கி அழுகிறாள். 


அவளது அப்பா தேவராஜ் அயலிக்கு ஆறுதல் சொல்கிறார். ஜமுனா செல்லம் ஆகியோர் மேலே வந்து சிவாவை பிடித்து திட்டி சத்தம் போடுகின்றனர். அமுதா இந்த விஷயத்தை அயலியிடம் சொல்ல அவள் அதிர்ச்சி அடைகிறாள். 


பிறகு அயலி சிவாவை பார்க்க மேலே வர, சிவா தனது அம்மாவின் போட்டோவை பார்த்து எனக்கு மட்டும் ஏன் மா இப்படி நடக்குது? நான் செத்து போய்விடவா? என்று கண் கலங்கி அழ வேண்டாம் என்று சொல்வது போல அவனது அம்மாவின் போட்டோ கீழே விழுந்து உடைக்கிறது. 


சிவா அப்பாவை கண்டுபிடிக்க அயலிக்கு கிடைத்த திட்டம்:


சத்தம் கேட்டு உள்ளே வந்த அயலி போட்டோவை எடுத்து சுத்தம் செய்யும் போது அதிலிருந்து வேறொரு போட்டோ கிடைக்கிறது. அதில் சிவாவின் அப்பாவின் கை மட்டும் இருக்கிறது. அந்த போட்டோவில் ஒரு மோதிரம் போட்டு இருப்பது தெரிய வருகிறது. 
 
இதை வைத்து உன்னுடைய அப்பாவை கண்டுபிடிக்கலாம் இது உங்க அம்மா உனக்கு கொடுத்து இருக்க க்ளூ என்று ஆறுதல் சொல்லி அவனை தேற்றுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய அயலி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.