தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அயலி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஜமுனா, தேவராஜை மிரட்டி தனது வழிக்கு வரவைத்து மாப்பிள்ளை பார்க்க கிளம்பிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
தரித்திரம்:
அதாவது, பாட்டி பூ கட்டி கொண்டிருக்க எல்லாரும் கும்பலாக வெளியே கிளம்ப தடுத்து நிறுத்தும் பாட்டி எங்கடி போறீங்க என்று கேள்வி கேட்க கோவிலுக்கு போவதாக சமாளிக்கின்றனர்.
கோவிலுக்கு போனா என்னை கூப்பிடாமல் போக மாட்டீங்களே என்று கேட்க செல்லமா அம்மா உனக்கு பிபி, சுகர் எல்லாம் இருக்கு அதனால் வீட்டிலேயே இரு என்று சொல்கிறாள். உடனே பாட்டி அப்படினா அயலியை கூட்டிட்டு போங்க என்று சொல்ல அந்த தரித்தரத்தை கூடவே கூட்டிட்டு போக முடியுமா என்று கேட்க அயலி வருத்தப்படுகிறாள்.
அயலியிடம் உண்மையை உடைத்த அமுதா:
இவர்கள் கிளம்பி சென்றதும் பாட்டி ஆறுதல் சொல்கிறாள். அடுத்து எல்லாரும் பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு வருகின்றனர், செங்குட்டுவன் குடும்பமும் அங்கு வந்து விடுகின்றனர். கபிலன் ரெஸ்ட் ரூம் சென்று வர்மாவிடம் பேச இந்திராணிக்கு உண்மை தெரியுமா? என்ற பில்டப் காட்சிகள் நகர்கின்றன.
பிறகு இரண்டு குடும்பமும் உட்கார்ந்து பேசி திருமணத்தை பேசி முடிக்கின்றனர். வீட்டிற்கு தேவராஜை பார்க்க இன்சூரன்ஸ் ஆபிசர் ஒருவர் வர அயலி அமுதாவுக்கு போன் செய்து எப்போ வருவீங்க? என்று விசாரிக்க அவள் ரித்திவிகாவுக்கு கல்யாணம் பேச வந்திருப்பதை சொல்லி விடுகிறாள்.
சத்தம் போடும் பாட்டி:
அயலி பாட்டிக்கு விஷயத்தை சொல்ல பாட்டி கோபப்பட்டு அயலியுடன் கிளம்பி ஹோட்டலுக்கு வருகிறாள். அயலி கபிலனை பார்த்து விடுவாளா? அவன் தான் மாப்பிள்ளை என்று தெரிந்து விடுமா என்று எதிர்பார்ப்பு கிளம்ப கடைசியில் மிஸ்ஸாகி விடுகிறது. பிறகு இங்கு நடப்பதை அறிந்து கொண்டு வீட்டிற்கு வருகிறாள். வீட்டில் எல்லாரும் வந்ததும் பாட்டி உங்களுக்கு அசிங்கமா இல்லையா? மூத்த பொண்ணு அயலி இருக்கும் போது ரித்திவிக்காவுக்கு எப்படி கல்யாணம் பண்ணலாம் என்று சத்தம் போடுகிறாள்.
நானே மாப்பிள்ளை வீட்டாரை சந்தித்து அயலினு மூத்த பொண்ணு இருப்பதை சொல்லிடுவேன் என்று சொல்ல ஜமுனா ஷாக் ஆகிறாள். நானே அயலிக்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்று சொல்கிறாள். இதனால் பாட்டி சரி விடு கெட்டதிலும் ஒரு நல்லது நடக்க போகுது என்று சொல்கிறாள்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அயலி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.