ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணிக்கு ஷண்முகத்தின் காதல் தெரிய வர ஷண்முகம் மரத்தின் அருகே சென்று வருந்திய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


அதாவது ஷண்முகம் வருத்தப்பட்டு கண் கலங்கி கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து பரணி அங்கு வர கண்களை துடைத்து கொண்டு ஒன்றும் நடக்காதது போல் ஷண்முகம் பேச தொடங்க உன் லவ்வர் ( அத்தை பொண்ணு ) எப்படி இருக்கா என்று கேட்க ஷண்முகம் எதையோ பதில் சொல்லி சமாளிக்க பரணி நீ என்னை காதலிச்சு இருக்கனு தெரியும் என்று சொல்லி ஷாக் கொடுக்கிறாள்.


ஷண்முகம் அப்படியெல்லாம் இல்லையே, உனக்கு யார் சொன்னா என்று கேட்க கனி சொல்லிட்டா என்று பரணி பதில் கொடுக்கிறாள், பிறகு எனக்கு உன்னை எப்போதில் இருந்து தெரியும்னு யோசித்து பார்த்தா அதுக்கு பதிலே இல்ல, பிறந்ததில் இருந்தே நான் உன்கூட தான் இருக்கேன். சூரியனும் நிழலும் எப்படி ஒண்ணா இருக்குமோ அப்படி தான் நீ என்கூட இருந்து இருக்க. எப்பவுமே என்கூடவே இருந்த உன்னை என்னால ஒருநாளும் லவ் பண்ண முடியாது என்று சொல்கிறாள்.


மேலும் ஷண்முகம் அது எங்கம்மா என்னை அப்படி சொல்லி வளர்த்ததால் எனக்குள்ள அப்படியொரு ஆசை இருந்தது, இப்போ இல்லை என்று சொல்லும் ஷண்முகம் உன் கல்யாணத்தை நானே நடத்தி வைக்கிறேன் என்று வாக்கு கொடுக்கிறான், பிறகு பரணி நீ என்னை காதலிக்க நான் ஏதோவொரு விதத்தில் காரணமாக இருந்து இருந்தால் அதுக்கு சாரி என்று மன்னிப்பு கேட்டு அங்கிருந்து நகர்கிறாள்.


மறுநாள் பாக்கியம் கையில் பத்திரிகையுடன் வைகுண்டம் வீட்டிற்கு வந்து பத்திரிக்கையை கொடுக்கிறாள், உங்க பேரை போட்டாச்சு, இந்த பத்திரிகையை தான் எல்லாருக்கும் தர போறோம். தாய் மாமன் முறையை செய்துடுங்க என்று சொல்லி பிரச்சனை எல்லாம் தீர்ந்து விட்டது என பரணியை அழைத்து கொண்டு செல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.