ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகத்தின் தங்கைகள் பரணியை கோவிலுக்கு கூப்பிட அவள் வர மறுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


அதாவது, வைகுண்டம் நானும் கோவிலுக்கு வரேன் என்று சொல்ல தங்கைகள் அப்பா நீயே உடம்பு முடியாமல் இருக்க நீ எதுக்கு என்று கேட்க பரணி உள்ளே போனதும் நாம் யாரும் இல்லனா தானே அவங்க ரெண்டு பேருக்கும் இடையே ஒரு நெருக்கம் வரும் என்று சொல்லி கோவிலுக்கு அழைத்து செல்கிறார்.


எல்லாரும் கோவிலுக்கு வந்து விட பரணி மட்டும் தனியாக இருக்கும் நிலையில் ஷண்முகம் வீட்டிற்கு போகாமல் கோவிலுக்கு வந்து விடுகிறான். இதை பார்த்து வைகுண்டம் கடுப்பாகி அவனை திட்டி மிரட்டி வீட்டிற்கு அனுப்பி வைக்க ஷண்முகம் வீட்டு கதவை தட்டுகிறான். பரணி கோவிலுக்கு போனவங்க வந்து விட்டதாக நினைத்து கதவை திறக்க ஷண்முகம் நிற்பதை பார்த்து ஷாக் ஆகிறாள்.


டேய் நான் தனியா இருக்கேன். நீ எதுக்குடா வந்த என்று கோபப்பட நீ தனியா இருக்கேனு தெரிந்து தான் வந்தேன் என்று சொல்ல பரணி அதை தப்பாக புரிந்து கொள்கிறாள், பிறகு ரூமுக்குள் வந்த உன்னை கொன்னுடுவேன் என்று சொல்லி ரூம் கதவை தாழிட போக தாழ்பாள் இல்லாமல் இருக்கிறது. பரணி இந்த ரூமுக்கு தாழ் இல்லையா என்று கேட்க என்னை பிடிக்கலைனு நீ தற்கொலை ஏதாவது பண்ணிக்கிட்டா என்ன பண்றது என மைண்டுக்குள் நினைத்து கொண்டு அதை நான் தான் கழட்டி வச்சிட்டேன் என்று சொல்ல பரணி இதையும் தப்பா புரிந்து கொள்கிறாள்.


இதனால் அரிவாளை எடுத்து வைத்து கொண்டு என்னை நெருங்கி வந்த வெட்டிடுவேன் என அரிவாளுடன் உட்கார ஷண்முகம் கன்பியூஸ் ஆகிறான், மறுபக்கம் சௌந்தரபாண்டி வீட்டிற்கு வர பாக்கியம் எங்க போய் இருந்தீங்க என்று கேட்க சனியன் அவசரப்பட்டு ஜெயிலுக்கு என்று உளற சௌந்தரபாண்டி ஒரு வழியாக அதை சமாளித்து விடுகிறார்.


பிறகு முத்துப்பாண்டி உங்களுக்கு போன் பண்ணா மலையாளத்தில் ஏதோ சொல்லுச்சே என்று கேட்க மசாஜ் செய்ய கேரளா போயிட்டு வந்தேன் என்று சொல்லி சமாளித்து பாக்கியத்திடம் நீ ஹாஸ்பிடலில் புருஷன்னு கூட பாக்காமல் என்னை இடிச்சி தள்ளிட்டு உன் அண்ணனை பார்க்க ஓடுற, அவ்வளவு பாசமா என்று கேட்க எனக்கு தூக்கம் வருது என எஸ்கேப் ஆகி விடுகிறாள். பிறகு சௌந்தரபாண்டி சனியனை தனியே அழைத்து சென்று அந்த ஷண்முகம் இனி உயிரோட இருக்க கூடாது. அவனை போட்டு தள்ள ஒரு ஆளை ஏற்பாடு பண்ணு என்று சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்தாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்