அண்ணா சீரியல்:


இயக்குநர் துர்கா சரவணன் இயக்கத்தில், மிர்ச்சி செந்தில் குமார் மற்றும் நித்யா ராமன் முன்னணி ரோலில் நடித்து வரும் தொடர் அண்ணா. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2023 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி முதல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் தொடர்களில் ஒன்று அண்ணா சீரியல்.


கிட்டத்தட்ட 400 எபிசோடுகளை கடந்து, வெற்றிகரமாக அண்ணா சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. அதாவது ஒரு வருடத்தை கடந்து வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த தொடரில் பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளராக உள்ளே சென்றுள்ள சத்யா முத்துப்பாண்டி கதாபாத்திரத்தில், ஐபிஎஸ் அதிகாரியாக நடித்து வந்தார். 


பிக்பாஸ் சத்யா நடித்த முத்துப்பாண்டி கதாபாத்திரம் மாற்றம் 


இதுவரையில் அவர் நடித்து வந்த எபிசோடுகள் முடிந்த நிலையில், சில நாட்கள் அவருக்காக ஜீ தமிழ் தரப்பு காத்திருந்தது. ஆனால் தற்போது பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் அவர் தீவிரமாக விளையாடி கொண்டிருப்பதால் அவருக்குப் பதிலான வேறு ஒரு நடிகரை ஜீ தமிழ் தேர்வு செய்துவிட்டது.




தற்போது முத்துப்பாண்டி கதாபாத்திரத்தில் நடிக்கும் அந்த நடிகர் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி சத்யாவிற்கு பதிலாக முத்துப்பாண்டியாக நடிக்க இருப்பது அஃப்சல் ஹமீத் தானாம். இன்று முதல் அண்ணா சீரியலில் இவரது கதாபாத்திரம் தொடர்பான காட்சிகள் இடம் பெறும் என்று தெரிகிறது. இவர் என்4 என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதே போன்று 6 ஹவர்ஸ் என்ற படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.