ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.


இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரத்னாவை காணாத காரணத்தினால் எல்லோரும் மார்ச்சூரியில் காத்துக் கொண்டிருக்க இவர்களுடன் சேர்ந்து காத்திருந்த இரண்டு குடும்பங்கள் உள்ளே சென்று டெட் பாடியை பார்த்துவிட்டு அது தங்கள் வீட்டு பெண் இல்லை என உறுதி செய்கின்றனர்.


இதனால் சண்முகம் குடும்பம் அதிர்ச்சி அடைந்து நிற்க சௌந்தரபாண்டி அப்படின்னா அது ரத்னா தான், ஆக வேண்டிய வேலைகளை பார்க்கலாம் என சொல்லி எல்லோருக்கும் தகவல் கொடுக்க பரணி சண்முகம் ஆகியோர் அது ரத்னாவாக இருக்காது என சொல்கின்றனர்.அதன் பிறகு பரணி மற்றும் இசக்கி இருவரும் உள்ளே சென்று அது ரத்னாவா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள போக வெளியில் சண்முகம் அது என் தங்கச்சியா இருக்கக்கூடாது என திருச்செந்தூர் முருகனை வேண்டி கலங்கி நிற்கிறான்.


உள்ளே போன இவர்கள் முகத்தை திறந்து பார்க்க அது ரத்னா இல்லை என தெரிய வருகிறது. மறுபக்கம் வெளியில் அண்ணே என குரல் கேட்க ரத்னா வந்து நிற்பதை பார்த்து எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். எல்லாரும் ரத்னாவை கட்டியணைத்து அன்பை பரிமாற ஷண்முகம் இனி உன்னை கேட்காமல் நான் எதுவும் செய்ய மாட்டேன் என்று உருக்கமாக பேச ரத்னா யாருக்கும் கிடைக்காத அண்ணன் நீ, எனக்கு உன்னுடைய சந்தோசம் தான் முக்கியம் என சொல்கிறாள்.


அடுத்ததாக எல்லோரும் வீட்டுக்கு வந்த பிறகு தங்கைகள் நால்வரும் தைத்த ஜாக்கெட்டை வாங்க கடைக்கு செல்ல எப்போதும் குடிக்க கிளம்பி விடும் வைகுண்டம் வீட்டிலேயே இருப்பதை பார்த்து எங்கேயும் போகலையா என கேட்கின்றனர். அவர் எனக்கு என்னுடைய மகள்கள் உடைய பாசம் மட்டும் போதும் என பேசுகிறார்.


மறுபக்கம் சண்முகம் கல்யாண பத்திரிக்கை வாங்க வந்திருக்க பத்திரிக்கையை வாங்கி பார்த்து சந்தோஷப்படுகிறார். இந்த விஷயத்தை வீட்டில் இருப்பவர்களுக்கு போன் பண்ணி சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்ப தங்கைகள் வெளியே வந்த போது ஒரு பெண்மணி அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வர அவளது கணவன் நீ எங்க போனாலும் உன்னை விடமாட்டேன் என துரத்தி துரத்தி அடிக்கிறான்.இதைப் பார்த்து தங்கைகள் நால்வரும் டென்ஷனாக முத்துப்பாண்டி அங்கு வந்து இறங்கும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.