தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா, இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் முத்துப்பாண்டி ரத்னாவை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டி வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, வெட்டுக்கிளி மூலமாக இந்த விஷயம் பரணிக்கு தெரிய வர அவள் அதிர்ச்சி அடைகிறாள். மறுபக்கம் சௌந்தரபாண்டி அந்த ஷண்முகம் எங்க போய் ஒளிந்து இருப்பான் என்று பேசி கொண்டிருக்க பாக்கியம் பின்பக்க வழியாக அவளை மேலே அழைத்து செல்கிறாள்.
இதனை தொடர்ந்து பரணி சண்முகத்துக்கு போன் செய்து முத்துப்பாண்டி ரத்னாவை தூக்கிய விஷயத்தை சொல்லி அவளை எப்படியாவது காப்பாற்று என்று போனை வைக்கிறாள்.இங்கே முத்துப்பாண்டி ஸ்டேஷனில் டீ வாங்கி வர சொல்லி தனது கையால் ரத்னாவை குடிக்க வைக்க முயற்சி செய்ய அவள் குடிக்க மறுக்கிறாள். இது என்னுடைய ஸ்டேஷன், இங்க நான் நினைக்கிறது தான் நடக்கும் 6 மணிக்குள்ள உன் அண்ணன் இங்க வரல இங்க வச்சே உன் கழுத்துல தாலி கட்டிடுவேன் என்று மிரட்ட ரத்னா என் அண்ணன் வருவான் டா என்று பதிலடி கொடுக்கிறாள்.
அடுத்ததாக சௌந்தரபாண்டி, சனியன் ஆகியோர் சாப்பிட்டு கொண்டிருக்க சனியனுக்கு ஒரு போன் கால் வர அவரது பொண்டாட்டி ஏங்க எவனோ ஒருத்தன் கழுத்தில் கத்தியை வச்சி மிரட்டிட்டு இருக்கான் என்று சொல்ல சனியன் பதறுகிறார். பிறகு ஷண்முகம் இன்னும் கொஞ்சம் நேரத்துல நீ உங்க இல்ல, உன் பொண்டாட்டியை உசுரோட பார்க்க முடியாது என்று சொல்ல பதறியடித்து ஓடி செல்கிறான்.
விஷயம் தெரியாத சௌந்தரபாண்டி உன் சாப்பாடு பிடிக்காமல் தெறித்து ஓடுறான் போல என பாக்கியத்தை கலாய்க்க அவள் என் மருமகனை பத்தி சாதாரணமாக நினைக்காதீங்க, அவன் திருப்பி அடிக்க தொடங்கினா நீங்க தாங்க மாட்டீங்க என்று சொல்ல சௌந்தரபாண்டி போய் வேலைய பாருடி என்று திட்டுகிறார். அடுத்து பரணி, வைகுண்டம், தங்கைகள் என எல்லாரும் ஸ்டேஷனுக்கு சென்று ரத்னாவை விட சொல்லி சத்தம் போட 6 மணிக்குள்ள ஷண்முகம் இங்க வரணும், இல்லனா ரத்னா கழுத்தில் தாலி கட்டிடுவேன் என்று மிரட்டுகிறான்.
மேலும் 100 நாள்ல அவன் கட்டின தாலியை கழட்டி போட்டுட்டு வர போறவ தானே நீ அப்புறம் எதுக்கு இவர்களுக்காக வந்து பேசிட்டு இருக்க என்று கேட்க பரணி நான் ஷண்முகத்துக்காக வரல, என் தாய் மாமனுக்காக இங்க வந்து பேசிட்டு இருக்கேன் என்று பதிலடி கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.