ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும்.
வீட்டுக்கு வந்த பாட்டி அன்னத்தை வேலை வாங்கி வரும் நிலையில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.
அதாவது, பாட்டி அன்னலட்சுமியிடம் அமுதா படிப்பு பற்றி கேக்க, அன்னம் என் மருமக படிக்க வேண்டாம் இந்த வீட்டை பார்த்துக்கிட்டா போதும் என சொல்கிறாள். பாட்டி அமுதாவிடம் உன்னை உன் புருஷனும், உங்க அத்தையும் நல்லா பார்த்துப்பேன்னு சொல்றாங்க, இதை தாண்டி நீ எதுக்காக படிக்கனும், அப்படி படிச்சா உன் வாழ்க்கைல என்ன மாற்றம் வரும்னு எனக்கு நிரூபிச்சி காட்டு அப்புறம் என் தீர்ப்ப்பை சொல்றேன் என சொல்கிறார்.
அதனை தொடர்ந்து அமுதா தனியாக அமர்ந்து யோசித்துக் கொண்டிருக்க, அதைப் பார்த்த மாணிக்கம் என்னாச்சு ஆத்தா ஏன் இப்படி உட்கார்ந்திருக்க என கேக்க, அமுதா பாட்டிக்கு தான் என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை , ஆனா எனக்கு படிக்கனும்னு என் மனசு தவிக்குது, அதை பண்ணாம விட்டா என்னால நிம்மதியா வாழ முடியாது சித்தப்பா என சொல்கிறாள்.
இதையடுத்து என் மனசுக்குள்ள இருக்குற வலியையும் வேதனையையும் மத்தவங்களுக்கு புரியுற மாதிரி என்னால வெளில சொல்ல முடியலை, அதனால தான் பாட்டி கேட்ட கேள்விக்கு என் மனசுக்குள்ள பதில் இருந்தும் என்னால சொல்ல முடியலை என்று சொல்ல மாணிக்கம் என்னமா அந்த அம்மா கேட்டதெல்லாம் எனக்கு கேள்வியா தெரியலை.. எல்லாரும் ஏன் படிக்கலைன்னு தான கேப்பாங்க, யாராவது படிக்க ஆசைப்படுறவங்களை பார்த்து ஏன் உனக்கு படிக்கனும்னு கேட்டுருங்காங்களா, எனக்கு தெரிஞ்சு உலகத்துலயே எவனும் அப்படி கேட்டிருக்க மாட்டான், நீ அந்த கேள்வியை அவங்க கிட்டயே கேளு என சொல்ல, அமுதா யோசிக்கிறாள்.
மறுநாள் காலையில் எழுந்து அமுதா அங்குமிங்கும் நடந்தபடி இருக்க அப்போது சிறுவயது கதிரேசன் போல பட்டை அணிந்து கண்ணாடி போட்டுக் கொண்டு ஒரு உருவம் அமர்ந்திருக்க அமுதாவை பார்த்ததும் என்ன அமுதா என்ன யோசிக்கிற , நீ படிக்கிறதுக்கு ஊர் உலகம் எல்லாரும் ஏத்துக்குற மாதிரி காரணம் சொல்ல முடியும், ஆனா இந்த குடும்பம் ஏத்துக்குற மாதிரி உன்னால காரணம் சொல்ல முடியலை அதான உன் பிரச்சனை என சொல்ல, அமுதா ஷாக் ஆகிறாள்.
பிறகு அமுதா அவனிடம் என் பிரச்சனை எப்படி உனக்கு தெரியும்.. உன் பிரச்சனை எனக்கு தெரியாம எப்படி இருக்கும், அந்த பிரச்சனைக்கு இந்த வீட்டுக்குள்ள தான் பதில் இருக்கு, அதை சொன்னா யாரு ஏத்துக்கிடனுமோ அவங்க ஏத்துப்பாங்க, கிட்டவா என சொல்ல அமுதா அவனருகே போக அவள் காதில் மியூட்டில் சொல்லும் பில்டப்ஸ்.
இதை கேட்டு அமுதா ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் பார்கக்க சிறுவன் மறைகிறான். பிறகு அமுதா பாட்டியிடம் ஒரு கதையை சொல்ல அந்த கதை கதிரேசனை பாட்டி எப்படி கஷ்டப்பட்டு படிக்க வைத்தார்கள் என்பதை ஒத்து போக, பாட்டி நெகிழ்கிறார்.