Siragadikka Aasai Meena: சிறகடிக்க ஆசை ஹீரோயின் மீனா யார்? அவருக்கு ஆடிஷன் நடந்தது எப்படி?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் ஹீரோயின் மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் கதாநாயகி யார்? அவருக்கு ஆடிஷனில் நடந்தது என்ன? என்பதை கீழே காணலாம்.

Siragadikka Aasai: தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபாகும் இந்த சீரியலுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலின் நாயகியான மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் கோமதி பிரியா எங்கே பிறந்தவர்? எங்கே படித்தவர்? என கீழே விரிவாக காணலாம்.
சிறகடிக்க ஆசை ஹீரோயின் பெயர்:
இதுதொடர்பாக, அவரே ஒரு நேர்காணலில் கூறியிருப்பதாவது, "என்னோட உண்மையான பெயர் கோமதி பிரியா. என்னோட சொந்த ஊரு மதுரை. இன்ஜினியரிங் டிகிரி. ஈசி டிபார்ட்மென்ட். எனக்கு ஒரு தம்பி, தங்கை உள்ளனர். 12ம் வகுப்பு வரை மதுரையில படிச்சேன். டிகிரி சென்னையில படிச்சேன்.
Just In




காலேஜ்ல நான் நல்லா படிப்பேன். என் குடும்பம் லோயர் மிடில் கிளாஸ். ஸ்காலர்ஷிப்ல படிச்சு ஒரு கம்பெனியில 8-9 மாசம் வேலை பாத்தேன். அதுக்கு அப்புறம் வேலையை விட்டுட்டு நடிக்க வந்தேன். என்னோட முதல் ப்ராபர் ப்ராஜெக்ட் ஓவியா. டைரக்டர் பாலா சாரோட வர்மா படத்துல ஒரு சின்ன ரோல் பண்ணிருப்பேன். முதல்ல ஆக்டிங் நமக்கு அந்தளவு வராது. எனக்கு ஃபேமிலி பேக்ரவுண்ட்ல இல்லாததால படிக்குற ஸ்டூடண்ட்தான்.
ஆடிஷன் எப்படி?
எனக்கு ஆடிஷனே ஃபில்டர் பண்ணி எடுத்தது 6, 7 டைப் ஆடிஷன் வச்சு எடுத்தாங்க. இந்த பொண்ணு நல்லா இருக்குது. ஏதாவது சொல்லிக் கொடுத்தா பண்ணும்னு நம்பிக்கையிலதான் எடுத்தாங்க. முதல்ல நிறைய கஷ்டப்பட்டேன். நடுங்குவேன். பயப்படுவேன். இப்போ போகப்போக பிக் அப் ஆகிட்டேன்.
பலருக்கும் ஷாக்:
எங்க வீட்ல முழு சுதந்தரம்தான். எங்க வீட்ல என்னோட முடிவுதான் குறிப்பிட்ட வயசுக்கு பிறகு. நான் சீரியல் பண்றது எங்க வீட்ல யாருகிட்டயும் சொல்லல. அந்த ப்ரமோ பாத்து இந்த பாெண்ணு உன்ன மாதிரி இருக்குது.. உன்னை மாதிரி இருக்குதுனு எல்லாரும் சொல்லவும்தான் நான்தான் அதுனு சொன்னேன். எனக்கு எப்படி வாய்ப்பு கிடச்சதுனு இன்னமும் நிறைய பேரு என்னை ஷாக்காதான் பாப்பாங்க.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
தமிழில் நம்பர் 1 சீரியலாக இந்த சிறகடிக்க ஆசை சீரியல் உள்ளது. இதில் நாயகியாக நடிக்கும் மீனா கதாபாத்திரம் மற்றும் நாயகனாக நடிக்கும் முத்து கதாபாத்திரத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த கதாபாத்திரத்தில் ரோகிணி வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த சீரியலில் வித்யா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்ருதி நாராயணனின் வீடியோ இணையத்தில் கசிந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.