Siragadikka Aasai Written Update: சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம். 


"மீனா சாப்ட கூப்டாலாம் நீ வர்லியாமா?" என அண்ணாமலை விஜயாவிடம் கேட்கிறார். அதற்கு விஜயா, "இவ தான் இந்த வீட்டுக்கு எஜமானி அம்மாவா? இவ கூப்டா நான் உடனே வந்து நிக்கணுமா எனக்கொண்ணும் வேணா" என  சொல்கிறார். "அப்போ உனக்கு பசிக்கலையா?" என அண்ணாமலை கேட்கிறார். எனக்கு பசிச்சாலும் வேண்டாம் என விஜயா சொல்கிறார். "அப்பா அவங்க விரதம் இருக்காங்க போல வாபா நாம சாப்டலாம்" என்கிறார் முத்து. ரோகிணி, மீனா அனைவரும் கூப்பிடுகின்றனர். அப்போதும் விஜயா வரவில்லை. "உன் புள்ள ரவி தான் வா வானு சொன்னா, நீயும் கூப்ட அதனால தான் நான் பங்ஷனுக்கு வந்தேன்" என முத்து சொல்கிறார். 


”இன்னைக்கு என்ன சாப்பாடு?” என முத்து கேட்கிறார். ”பாவக்காய் சாம்பார், பொரியல்” என மீனா சொல்கிறார். ”பாவக்காய் குழம்பு அதான் இவங்க சாப்ட மாட்டேனு சொல்றாங்க நீ வேற எதாவது குழம்பு வச்சி கொடுத்துடு” என முத்து சொல்கிறார். ஸ்ருதிக்கு உணவு எடுத்துக் கொண்டு ரவி செல்கிறார். ”உங்க ரெஸ்டாரண்ட்ல ஆர்டர் பண்ணா நீ தான் எடுத்துட்டு வருவன்னு எனக்கு தெரியும்” என ஸ்ருதி சொல்கிறார்.” நான் வரணும்னு தான் நீ எங்க ரெஸ்டாரண்ட்ல புட் ஆர்டர் பண்ணனு எனக்குத் தெரியும்” என ரவி சொல்கிறார். ”நம்ம வீட்டுக்கு வர்லனு எல்லோரும் வருத்தப்படுறாங்க. முத்து தேடிக்கிட்டு வந்து வீட்டுக்கு வானு கூப்புட்றான்” என்கிறார் ரவி. ”என்னையும் கூப்டாங்க” என்கிறார் ஸ்ருதி. ”யாரு?” என ரவி கேட்கிறார். மீனா என ஸ்ருதி சொல்கிறார். 


”தலை இப்போவே கிறு கிறுனு இருக்கு” என மனோஜ் சொல்கிறார்.” நீ போய் சாப்புட்றா உன்னை யாரு வேண்டானு சொன்னது” என விஜயா சொல்கிறார். ”இன்னைக்கு பாவக்கா குழம்புணு தானே சொன்னாங்க எனக்கு மட்டும் பிரியாணி வாசனையா வருதுப்பா” என மனோஜ் சொல்கிறார். அதற்கு முத்து ”டேய் படிப்பாளி, வாசனை பாவக்காய்ல இருந்து வர்ல பிரியாணியில இருந்து தான் வருது” என சொல்கிறார். சுட சுட சிக்கன் பிரியாணி என முத்து சொல்கிறார். உடனே விஜயா ஏக்கமாக வெளியே பார்க்கிறார். பின் முத்து டைனிங் டேபிளில் வாழை இலையை போட்டு அதில் பிரியாணி வைத்து சைடிஷ்களை வைக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.