சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.
"நேத்து அத்தை பேசினது நீலாம்பரியையும், காஞ்சனா பேயையும் ஒன்னா பார்த்த மாதிரி இருந்துச்சி. இதுக்கு நான் ஒரு முடிவு கட்டலனா அப்பறம் நான் கஷ்டப்பட்டதெல்லாம் வேஸ்ட்டா ஆயிடும்" என ரோகிணி சொல்கிறார். ”தினமும் பயந்து பயந்து தானே செத்துக்கிட்டு இருக்க. அதுக்கு உண்மைய சொல்லிட்டு போய்டலாம் இல்லடி” என வித்யா கேட்கிறார். ””இப்போ அவன் இருக்க மெண்டாலிட்டியில உண்மை தெரிஞ்சா அவனும் என்னை ஏத்துக்க மாட்டான்” என ரோகிணி சொல்கிறார்.
ரோகிணியின் மாமாவாக நடித்த ப்ரெளன் மணி வீட்டிற்கு வருகிறார். விஜயா ”ரோகிணி உங்க மாமா வந்து இருக்காரு’ என சொல்கிறார். ப்ரெளன் மணி வீட்டுக்குள் நுழைந்த உடனேயே ”கதவு ஜன்னல் எல்லாம் மூடுங்க” என சொல்கிறார். ப்ரெளன் மணி, அழுதுக் கொண்டே ”உங்க அப்பாவோட பிஸ்னஸ் பார்ட்னர் எல்லாம் சூழ்ச்சி பண்ணி அவரை ஏமாத்திட்டாங்மா” என்று சொல்கிறார். இதை கேட்டு ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். ”நான் போய் அவரை ஜெயிலில் பார்த்துட்டு வந்தேன்” என்று ப்ரெளன் மணி சொல்கிறார்.
”அப்போ சொத்தெல்லாம் எடுத்துப்பாங்களா” என விஜயா கேட்கிறார். முத்து மீனாவின் காதில் ”பார்த்தியா அவருக்கு எதாவது ஆச்சானு கேட்கல. சொத்தெல்லாம் போய்ட போகுதுன்னு பயப்படுறாங்க” என சொல்கிறார். ”சொத்தெல்லாம் எடுக்க மாட்டாங்க. இப்போதைக்கு எதையும் எடுக்க முடியாதுனு சொல்லி ப்ளாக் பண்ணி வச்சிட்டாங்க” என்று சொல்கிறார் ப்ரெளன் மணி. ”நானே இப்போ திருப்பதிக்கு போய் மொட்டை போட போறேன்” என ப்ரெளன் மணி சொல்கிறார். ”இந்த தலையிலயா?” என முத்து கலாய்க்குறார்.
”ரோகிணியால இதை எப்டிங்க தாங்கிக்க முடியும் . அவரு சீக்கிறம் வெளியே வந்தா நல்லது தான்” என மீனா சொல்கிறார். மீனா விஜயாவுக்கு காபி கொண்டு போய் கொடுத்து, ”நீங்க எப்பவுமே இந்த டைம்க்கு காபி குடிப்பிங்க இல்ல இந்தாங்க” என சொல்கிறார். விஜயா அந்த காபியை தட்டி விட்டுச் செல்கிறார். மனோஜ் முத்துவை பார்த்து ”நீ மட்டும் அந்த பங்ஷனுக்கு வராம இருந்து இருந்தா இவ்ளோ பிரச்சனை நடந்து இருக்காது” என சொல்கிறார். ”ஸ்ருதி இந்த வீட்டை விட்டு போனதுக்கு காரணமே நீ தான்” என்று விஜயா சொல்கிறார். ”அவங்க கோச்சிக்கிட்டு போனதுக்கு நான் என்ன அத்தை பண்ண முடியும்” என மீனா கேட்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.