விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இந்த வாரம் என்ன நடக்கும் என்பதை காணலாம்.
சிறகடிக்க ஆசை
சின்னத்திரையில் முன்னணி நிறுவனமாக உள்ள விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு என தனி ரசிகர்கள் உள்ளனர். எஸ்.குமரன் இயக்கி வரும் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணியில் உள்ளது. வெற்றி வசந்த், கோமதி பிரியா, ஆர்.சுந்தரராஜன், பாக்யலட்சுமி, அனிலா ஸ்ரீகுமார், ஸ்ரீதேவா, சல்மா அருண் கல்யாணி, ப்ரீத்தா ரெட்டி என ஏகப்பட்ட பேர் இந்த சீரியலில் நடித்து வருகின்றனர்.
இந்த சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒவ்வொரு நாளும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலுக்கென தனி ரசிகர்கள் உள்ளனர். டிஆர்பி ரேட்டிங்கிலும் இந்த சீரியல் மிகப்பெரிய அளவில் மாற்றம் கண்டுள்ளது. கடந்த வாரம் மூன்று மகன்களையும் வீட்டில் இருக்கும் இரண்டு ரூம்களில் சுழற்சி அடிப்படையில் மனைவியுடன் தூங்க வேண்டும் என அண்ணாமலை தெரிவிக்கிறார்.
அந்த வகையில் மனோஜ், ரோகிணி வெளியே படுக்கும் நிலையில் மனோஜால் தூங்க முடியவில்லை. இதனால் டென்ஷனாகும் அடுத்த வாரம் கண்டிப்பாக பிரச்சினை வெடிக்கும் என ரோகிணி தெரிவிக்கிறார்.
இந்நிலையில் இந்த வாரம் மீனாவுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவளை ரூமில் படுத்து ரெஸ்ட் எடுக்க சொல்லி விட்டு முத்து மாத்திரை வாங்க செல்கிறார். அதற்குள் அங்கு வரும் மனோஜ் மீனா ரூமில் படுத்திருப்பதை பார்த்து, ‘என் ரூமில் அவ படுத்துருக்கா’ என விஜயாவிடம் குறை சொல்லுகிறார்.இதனால் கடுப்பாகும் விஜயா, நேராக ரூமுக்கு சென்று படுத்திருக்கும் மீனாவை எழுப்பி வெளியே அழைத்து வருகிறார். இதனை முத்து பார்த்து டென்ஷனாகிறார்.
உடனே ரோகினி என்னால் வீட்டுக்கு வந்து நிம்மதியா ரெஸ்ட் எடுக்கக்கூட முடியல என கூற, நான் தான் மீனாவை ரூம்ல படுத்து ரெஸ்ட் எடுக்க சொன்னேன் என பதில் சொல்கிறார்.
இதனைத் தொடர்ந்து மீனாவை காலையிலேயே எழுந்திருச்சி சமைக்க வேண்டாமா என விஜயா திட்டுகிறார். இதனால் கடுப்பாகும் முத்து இனிமேல் மீனா சமைக்க மாட்டா. அப்பாவுக்கு மட்டும் சேர்த்து சமைப்பா. மத்தவங்க அவங்கவங்களுக்கு வேணும்னா சமைச்சிக்கட்டும்” என கறாராக சொல்லி விடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.