விஜயா ரோகினியிடம் “நீ நெனச்சி இருந்தா இன்னைக்கு மனோஜ் மொதலாளியா உட்கார்ந்து இருப்பான். ஆனா எனக்கு நீ அவனை கண்டுக்குற மாதிரியே தெரியல. அந்த முத்து மீனாவ சரியாக்கூட பாத்துக்குறது இல்ல. ஒரு நல்ல புருஷனா கூட அவன் நடந்துக்குறது இல்ல. ஆனாலும் அந்த மீனா அவனுக்கு கார் வாங்கி கொடுத்து இருக்கா. மனோஜ் உன்கிட்ட கோவமா ஒரு வார்த்தை கூட பேசினது இல்ல அவனுக்காக நீ என்ன செஞ்சி இருக்க என கேட்கிறார். 


மனோஜூக்கு ஒரு வழி பண்ணு:


”அவன கொஞ்சம் முன்ன தள்ளி விடுறதுக்கு ஆள் இருந்தாங்கனு வை அவன் உயர உயர போய்க்கிட்டு இருப்பான்” என விஜயா சொல்கிறார். ”நீ என்ன பண்ணுவனு எனக்குத் தெரியாது. நீ இப்போவே உங்க அப்பா கிட்ட பேசி மனோஜிக்கு ஒரு வழி பண்ணு” என்கிறார் விஜயா.  ”நீ கண்டிப்பா பேசணும்” என ரோகினியிடம் கோபமாக சொல்லி விட்டு செல்கிறார் விஜயா. 


ரோகினி மீனாவிடம் கார் எப்படி வாங்கினிங்க என கேட்கிறார். ”கார் வாங்குற அளவுக்கு மாலை கட்டுறதுல பணம் வருமா என்ன” என்றும் கேட்கிறார். ”முத்துவே போய்ட்டு வாங்கிட்டு நீங்க வாங்கி கொடுத்ததா சொல்றாரா?” என ரோகிணி மீனாவிடம் கேட்கிறார். ”நீங்க காரை வாங்கி கொடுத்துட்டிங்க அதனால எனக்கு தான் பிரச்சனை”  உங்க மேல எப்பவும் அவர் கோவமா தானே நடந்துக்குறாரு” என்கிறார் ரோகிணி. ”உங்களுக்கு ஒரு லட்சம் செலவு ஆச்சா இல்ல அதுக்கு மேல செலவு ஆச்சா” என கேள்வி மேல் கேள்வி கேட்கிறார் ரோகிணி.


உள்ளே வந்த ஸ்ருதி:


உடனே ஸ்ருதி உள்ளே வந்து, ”விட்டா அவங்க பேங்க் ஸ்டேட்மெண்ட் கூட கேட்பிங்க போல இருக்கு” என்கிறார் ஸ்ருதி. ”ஹஸ்பண்ட் அண்ட் ஒய்ஃப் குள்ள பண்னிக்குற செலவ கேட்க கூடாது” என்கிறார் ஸ்ருதி. ”மீனா பூக்கட்டி அவங்க ஹஸ்பண்டுக்கு கார் வாங்கி கொடுத்துருக்காங்க இது எவ்ளோ இன்ஸ்பிரேஷனா இருக்கு. அவங்கள பாராட்டாம நீங்க இத்தை கேள்வி கேட்குறிங்க” என்கிறார்  ஸ்ருதி. 


ஸ்ருதியின் அம்மா விஜயா வீட்டுக்கு வருகிறார். ரவி ஸ்ருதிக்கு பங்ஷன் நடத்த இருப்பதாக ஸ்ருதியின் அம்மா சொல்கிறார். ”ரோகிணிக்கும் ஸ்ருதிக்கும் ஒரே நாளுல தாலி பிரிச்சி கோக்குற பங்ஷன் பண்ணிடலாமா?” என விஜயா கேட்கிறார். அதற்கு ஸ்ருதியின் அம்மாவும் ஓ.கே சொல்கிறார்.  ”உனக்கும் சேர்த்து தான் தாலி பிரிச்சி கோர்க்க போறோம். உடனே உங்க அப்பாவ வர சொல்லு  என ரோகினியிடம் சொல்கிறார். ”அவரு பிஸியா இருப்பாரு” என்கிறார் ரோகினி. ”உன் நல்லதுக்கு தான் சொல்றேன் அவரு வந்தா தான் உனக்கு கெளரவமா இருக்கும்” என்கிறார் விஜயா. 


ஸ்ருதியையும் ரவியையும் வீட்டோட கூட்டி வர ஸ்ருதியின் அம்மாவும் அப்பாவும் ப்ளான் போடுகின்றனர். விஜயா மீனாவுக்கு வேலை சொல்கிறார். எல்லாம் இவ தான் செய்யணுமா என முத்து கேட்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறவடைகிறது.