சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்:


மனோஜ் ஒரு வேலைக்காக இண்டர்வியூ சென்றிருக்கிறார். ”இங்க வந்த கேண்டிடேட்லயே வெல் க்வாலிஃபைடு நீங்க தான்” என்று இண்டவியூவர் சொல்கிறார். கனடாவில் இருக்கும் கம்பெனிக்கு  உங்களை செலக்ட் செய்து இருக்கிறோம் என கூறி அதற்கு 14 லட்சம் செலுத்த வேண்டும் என்று சொல்கின்றனர். 


மனோஜ் வேலையை விட்ட விஷயம் வீட்டிற்கு தெரிய வருகிறது. இதைக்கேட்டு அண்ணாமலை அதிர்ச்சி அடைகிறார். ”ஏங்க மனோஜ் எதையும் யோசிக்காம செய்ய மாட்டான். அவன் கண்டிப்பா வேலையோட தான் வருவான் பாருங்க” என்கிறார் விஜயா. மனோஜ் வீட்டிற்கு வந்ததும் விஜயாவை கூப்பிட்டு விஜயாவின் காதில் ரகசியமாக பேசுகிறார். அதை கேட்டு விஜயா அழுகிறார். 


மனோஜும் அழுகிறார். ”என்னாச்சி ஏன் அழுகுறிங்க’ என்று அண்ணாமலை கேட்கிறார். ரோகினியும் ”ஏன் மனோஜ் வேலை கிடைக்கலையா?” என கேட்கிறார். அதற்கு மனோஜ் ”கிடச்சிடுச்சி ரோகினி. என் படிப்புக்கும் டேலண்டுக்கும் ஏற்ற வேலை கிடச்சிடுச்சி” எனக்கூறி ரோகினியை கட்டிப்பிடித்து சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறார்.  லட்சத்தில் சம்பளம் என்றும் மனோஜ் கூறுகிறார்.


”இவ்ளோ சம்பளம் வாங்கி என் புள்ளை என்கூட இருக்க மாட்டானே” என கூறி விஜயா அழுகிறார். ”அப்போ நீ வேலைக்கு அந்த நாட்டுக்குத்தான் போகனுமா?” என கேட்கிறார் அண்ணாமலை. ”டேய் கண்ணா மனோஜ் இந்த வேலை நமக்கு வேணுமாடா?” என கேட்கிறார் விஜயா. அம்மா என் டேலண்டுக்கு ஏற்ற வேலை மா இது என்கிறார் மனோஜ். 


”விசா எப்போ வரும்” என்று ரோகினி கேட்கிறார். ”வேலை கன்பார்ம் ஆனா வந்துடும்” என்கிறார் மனோஜ். அப்போது மீனா ”மாமா இவரு வேலை கிடச்சிடுச்சிணுதானே சொன்னாரு” என கேட்கிறார். உடனே மனோஜ் ”அதற்கு 14 லட்சம் கட்டணும்” என்று சொல்கிறார். இதைக்கேட்டு அண்ணாமலை, முத்து உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைகின்றனர். 


அண்ணாமலை மனோஜை கலாய்க்குறார். மேலும் குலுங்கி குலுங்கி சிரிக்கிறார். மறுபுறம் ரவி வேலை பார்க்கும் ரெஸ்டாரண்டுக்கு ஸ்ருதியின் அம்மா செல்கிறார். ”நீங்களும் என் பொண்ணும் சந்தோஷமா டைம் ஸ்பெண்ட் பண்ணனும்னு தான் நாங்க டிக்கெட் கொடுத்தோம்” என்கிறார். ”உங்க வாழ்க்கையில நாங்க அக்கரை எடுத்துக்க கூடாதா?” என்றும் கேட்கிறார். 


மனோஜிக்காக கஸ்டமர்ஸ் காத்திருப்பதாக அவரை கூப்பிடுகின்றனர். ”ஆண்டி ப்ளீஸ் இதையெல்லாம் வீட்ல பேசிக்கலாம் நீங்க கிளம்புங்க” என்று சொல்கிறார். ஆனால் ஸ்ருதியின் அம்மா நிலைமையை புரிந்து கொள்ளாமல் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கின்றார். அப்போது அடுப்பில் வைத்த எண்ணெய் தீய்வததாக ஊழியர் ஒருவர் வந்து ரவியிடம் சொல்கிறார். 


இதைக்கேட்டு பதறிப்போய் ரவி ஓடுகிறார். ஸ்ருதியின் அம்மா ரவியின் பின்னாலேயே சென்று விடாமல் பேசுகிறார். இதனால் கோபமடையும் ரவி ”உங்க பொண்ண வேணா தனியே போக சொல்லுங்க” என்று சொல்லுகிறார். இதைக்கேட்டு ஸ்ருதியின் அம்மா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.