விஜய் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது குறித்துப் பார்க்கலாம்.


முத்து மீனாவிடம் தங்க தாலியை கொடுக்கின்றார். மீனா, விஜயாவிடம் "அத்தை நான் சொன்ன இல்ல என் புருஷன் எனக்கு வாங்கி தருவாருனு பாருங்க" என்கிறார். "வெறும் தாலி  மட்டும் தானே வாங்கிட்டு வந்து இருக்கான் இது என்ன ஒரு அரை பவுன் இருக்குமா?" என நக்கலாக கேட்கிறார் விஜயா. ஸ்ருதி விஜயாவிடம் "ஆண்டி மீனா கிட்ட வாங்கின நகையெல்லாம் குடுங்க நீங்க என்ன வட்டி கடைக்காரன் மாதிரி அதை வாங்கி வச்சிருக்கிங்க" என கேட்கிறார்?.  ”அச்சோச்சோ நான் எங்கமா வாங்கினே அவளே தானே கொடுத்தா” என்கிறார். 


முத்து தாலியை இப்போதே போட சொல்கிறார். அதற்கு மீனா ”இருங்க நான் வேற ஒரு ஐடியா வச்சிருக்கேன்” என்கிறார். மனோஜ் முத்துவை கிண்டல் செய்கிறார். அண்ணாமலை ”போய் எல்லாம் அவங்கவங்க வேலையை பாருங்க” என்கிறார். மீனா ரூமுக்குள் சென்று தாலியை பார்த்து சந்தோஷப்படுகிறார். தாலி வாங்க கடன் எதாவது வாங்குனீங்களா என கேட்கிறார் மீனா. கார்ல ஒருத்தர் பேக்(bag) விட்டுட்டு போய்ட்டாரு அதுல ஃபுல்லா பணம் அதுல வாங்கினே என்கிறார் முத்து. ஆனா மீனா நீங்க அப்படி எல்லாம் செய்ய மாட்டிங்க என்கிறார். 


பின் முத்துவும் மீனாவும் சந்தோஷமாக பேசி சிரிக்கின்றனர். விஜயா ரோகிணி ரூமுக்கு சென்று "இதுங்க அடிக்குற கூத்த பார்த்தியா ஏதோ 100 பவுன்ல நகையை வாங்குன மாதிரி போகுதுங்க" என்கிறார். "மீனா பூக்கடையை ஆரம்பிச்சதுக்கு அப்புறம் நல்ல காசு பார்க்க ஆரம்பிச்சிட்டா. இவ தான் முத்து கிட்ட காசு கொடுத்து தாலி வாங்க சொல்லி இருப்பா" என்கிறார். தாலி செயின் குண்டுமணி எல்லாம் வாங்கி போட்டுக்கோமா உன்னாலையும் முடியும்னு நீ காட்ட வேணாவா ?என்கிறார் விஜயா. 


அப்பா பிஸ்னஸ் விஷயமா வெளியே போய்ருக்காரு என்கிறார் ரோகிணி. ”உங்க அப்பாவ உங்க மாமா கிட்ட வாங்கி கொடுக்க சொல்லு என்கிறார். உங்க அப்பா இவங்கள மாதிரி கால் பாவுன் அரை பவுன் வாங்கி தர மாட்டாரு.. கிலோ கணக்குல வாங்கி தருவாரு” என்கிறார் விஜயா. ”அந்த மீனா முன்னாடி நீ தலை நிமிர்ந்து நடக்க வேணாமா” அதனால தான் நான் சொல்றேன். ”சரிங்க ஆண்டி மாமா கிட்ட நான் பேசுறேன்” என்கிறார் ரோகிணி. 


ரோகிணி வித்யாவிடம் சென்று வீட்டில் நடந்ததையும் விஜயா கேட்டதையும் சொல்கிறார். வித்யா ரோகிணியிடம் ”ஒரு பொய்ய ரொம்ப நாளைக்கு மறைக்க முடியாது” என்கிறார். இருந்த காசெல்லாம் செலவு பண்ணிட்டேன் என்கிறார் ரோகிணி. ”சிட்டி கிட்ட மறுபடியும் கடன் வாங்கலாம்” என்கிறார் வித்யா. இதைக்கேட்டு ரோகிணி அதிர்ச்சி ஆகிறார்.


பி.ஏ ரோகிணியின் பார்லருக்கு வந்து ரோகிணியை காசு கேட்டு மிரட்டுகிறார். ”ஏன்டா என்ன இப்படி டார்ச்சர் பண்ற” என்கிறார் ரோகிணி. ”தரியா இல்ல உன் வீட்டுக்கு போகவா” என மிரட்டுகிறார். மீனா முத்துவை கோவிலுக்கு ஏதோ சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக அழைத்துச் செல்கிறார். அங்கு மீனாவின் குடும்பதினரும் இருக்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.