‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் இன்றைய எபிசோடில் அண்ணாமலை முத்துவிடம், தான் சத்யா வீட்டிற்கு சென்றதாகவும் அவர்கள் பேசும்போது கூனிக்குறுகி நின்றதாகவும் சொல்கிறார். ”நீ ஏன்பா அங்கலாம் போன?” என்கிறார் முத்து. ”மீனா உனக்கு சப்போர்ட்டா இருக்கா. அவங்க குடும்பம் கஷ்டப்பட நீ காரணமா இருக்கலாமா?” என்கிறார் அண்ணாமலை. ”அவன் சொன்னா புரிஞ்சிக்கவே மாட்றான் பா” என்கிறார் முத்து. 


”தப்பு பண்ணா தட்டிக் கேட்கணும்னு நீயும் பாட்டியும் தானப்பா சொல்லி இருக்கீங்க” என்கிறார் முத்து. ”அவன் என்ன தப்பு பண்ணான்?” எனக் கேட்கிறார் அண்ணாமலை. ஆனால் முத்து அதற்கு பதில் சொல்லாமல் “இனி உங்க மனசு கஷ்டப்படுற மாதிரி நடந்துக்க மாட்டேன்பா” என்று சொல்லி விட்டு செல்கிறார். 


மனோஜ் லேட்டாக வீட்டுக்கு வருகிறார். ரோகினி ”ஏன் லேட்?” எனக் கேட்கிறார். “எல்லோரும் சாப்டு முடிச்சா தான் நான் வர முடியும்” என்று மனோஜ் சொல்கிறார். இதைக்கேட்டு ரோகினி அதிர்ச்சி அடைகிறார். பின் மனோஜ் அதை சமாளிக்கிறார். முத்து கார் ஷெட்டுக்கு ஆட்டோவில் வருகிறார். “இனிமேல் நான் ஆட்டோ தான் ஓட்டப் போகிறேன்” என்று முத்து சொல்கிறார். இதைக் கேட்டு முத்துவின் நண்பர்கள் வருத்தப்படுகின்றனர்.


மனோஜ் தெரியாமல் கஸ்டமர் மீது சாம்பாரைக் கொட்டி விடுகிறார். இதனால் கஸ்டமருக்கும் மனோஜூக்கும் சண்டை வருகிறது. இதனால் ஓனர் மனோஜைத் திட்டி மனோஜை வேலையை விட்டு போகச் சொல்கிறார்.  இதனையடுத்து மனோஜ் “இது என்ன பெரிய ஹோட்டலா? நான் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலே வைப்பேன்!” என ஓனரிடம் சவால் விட்டுச் செல்கிறார். 


மீனாவின் அம்மாவும் தங்கச்சியும் மீனாவின் வீட்டுக்கு வருகின்றனர். மீனாவோட அப்பாவுக்கு நினைவு நாள் வருவதாகக்கூறி மீனாவின் அம்மா அனைவரையும் வீட்டுக்கு கூப்பிட வந்ததாகச் சொல்கிறார். மீனாவின் அப்பா இறந்ததை நினைத்து அண்ணாமலை வருத்தப்படுகிறார். ”அந்தக் குற்ற உணர்வு இன்னும் எனக்கு இருந்துக்கிட்டே இருக்கு” என்கிறார் அண்ணாமலை. அதற்கு விஜயா “நீங்க ஏதோ தப்பு பண்ண மாதிரி ஏன் வருத்தப்படுறிங்க” எனக் கேட்கிறார். 


மீனாவின் அம்மா ஏதோ பேச வருகிறார். அப்போது விஜயா, “அது என்னமோ இருந்துட்டு போகுது, உங்க வீட்டோட பண்ணிக்க வேண்டியது தானே?” என்கிறார்.  மேலும் ”உங்க புருஷனே அல்ப ஆயுசுல போய் சேர்ந்துட்டாரு” என்கிறார் விஜயா. இதைக் கேட்டு மீனாவின் அம்மா வேதனைப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.


மேலும் படிக்க: Ranam Aram Thavarel Review: விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் கதை - வைபவின் ரணம் அறம் தவறேல் விமர்சனம் இதோ!


Mrunal Thakur: கங்கனா வீடுகளை விலைக்கு வாங்கிய மிருணாள் தாகூர்.. எத்தனை கோடி தெரியுமா?