Siragadikka Aasai Serial April 29: சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.


"இன்ஸ்பெக்டர் வந்துட்டாரு அவர் கிட்ட ஃபைன கட்டிட்டு வண்டிய எடுத்துட்டு போலாம்" என்று போலீஸ் முத்துவிடம் சொல்கிறார். ஜீவாவின் வழக்கறிஞர் "இப்போ நீங்க கண்டிப்பா தப்பிக்கவே முடியாதுமா. இப்போ அவங்க கேஸ கோர்ட்டுக்கு அனுப்பிட்டா நீங்க நாட்டை விட்டு போகவே முடியாது" என ஜீவாவிடம் சொல்கிறார். "அவங்க கிட்ட பேசுற மாதிரியே என்கிட்ட பேசுறிங்க. அந்த மனோஜை கூட ஏமாத்திடலாம் போல இருக்கு. அந்த பொண்ணு பயங்கர புத்திசாலியா இருக்கு. என்ன உங்க அப்பா பணத்தை கொடுக்குற மாதிரி சலிச்சிக்குறிங்க அவன் பணம் தானே" என வழக்கறிஞர் கேட்கிறார். அதற்கு ஜீவா, சரி கொடுத்துடுறேன் என்று சொல்கிறார். 


"பூவெல்லாம் வேற கொடுக்க வேண்டி இருக்குங்க" என்று மீனா சொல்கிறார். "அதை இப்போ யோசிச்சு என்ன பன்றது" என முத்து கேட்கிறார். முத்து போலீசிடம் சென்று "வண்டியில வேற ஒரு 30 முழம் பூ இருக்கு சார்" என்று சொல்கிறார். "வேணுன்னா நீங்க ஸ்டேஷனுக்காவது வாங்கி கொடுங்க சார். உள்ள இருக்க சாமி படம் தலைவர்கள் படத்துக்கெல்லாம் போடுங்க. யாரும் தப்பே பண்ண கூடாதுனு வேண்டிக்கோங்க" என முத்து சொல்கிறார். "யாரும் தப்பே பண்ணலனா எங்களுக்கு என்ன வேலை" என்று அந்த போலீஸ் கேட்கிறார்.


ஜீவாவின் வழக்கறிஞர் இன்ஸ்பெக்டர் மற்றும் ரோகிணியிடம் சென்று "27 லட்சத்தை அவங்க செட்டில் பண்ணிடுவாங்க" என்று சொல்கிறார். "இத்தனை நாள் அந்த பணத்தை வச்சி இருந்தாங்க இல்ல  வட்டி போட்டு 30 லட்சமா தர சொல்லுங்க" என்று ரோகிணி கேட்கிறார். "நியாயமா தானமா கேட்குறாங்க"என்று போலீஸ் சொல்லுகிறார். பின் ஜீவா, மனோஜின் வங்கி கணக்குக்கு பணத்தை ட்ரான்ஸ்பர் செய்கிறார்.


மனோஜிக்கு ரோகிணி சாட்சி கையெழுத்து போடுகிறார். ஆனால் ஜீவாவுக்கு சாட்சி கையெழுத்து போட யாரும் இல்லை. போலீஸ்க்காரர் ஜீவாவை ஸ்டேஷனுக்கு வெளியே அழைத்துச் செல்கிறார் அங்கு முத்து இருக்கிறார். "இவங்களுக்கு ஒரு சாட்சி கையெழுத்து போடனும் நீ போடேன்" என்று போலீஸ் கேட்கிறார். பின் முத்து கையெழுத்து போடுகிறார். தனக்கு கனடாவில் வேலை கொடுத்த நிறுவனம் சென்று மனோஜ் பணத்தை கட்ட தயாராக இருப்பதாக கூறுகிறார். பின் அந்த வேலைக்கு வேறு ஒருவரை தேர்ந்தெடுத்து விட்டதாக அந்த நிறுவனத்தில் கூறுகின்றனர்.  இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. 


பணம் கிடைத்ததை வீட்ல சொல்ல வேண்டாம். என் அப்பா அனுப்பினாருனே சொல்லிக்கலாம் என்று ரோகிணி மனோஜ் இடம் சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.