சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.


”நான் அந்த சிட்டிய போய் பார்த்துட்டு தான் வறேன்” என்கிறார் மீனா. ”முதல்ல யாரை கேட்டு அவனை பார்க்க போன அவனே ஒரு ரவுடிப்பயன்” என்கிறார் முத்து. ”முதல்ல அந்த கோவத்தை உன் தம்பிக்கிட்ட போய் காட்டு” என்கிறார் முத்து. ”உன்னால முடிஞ்சா உன் தம்பிய அடக்கி வை. அவன் தான் பொருக்கி மாதிரி சுத்திக்கிட்டு இருக்கான்” என்கிறார் முத்து. 


முத்து அரசியல் கட்சியில் இருக்கும் நண்பர் ஒருவரை சந்திக்கிறார். கல்யாணத்துக்கு 500 மாலை ஆர்டர் கொடுத்து இருந்தேன் அவன் ஒரு பொண்ணுக்கூட ஓடி போய்ட்டான்  என்று முத்துவின் நண்பர் அரசியல் கட்சியின் தலைவரிடம்  சொல்கிறார். உடனே அந்த கட்சியின் தலைவர் டென்ஷன் ஆகி முத்துவின் நண்பனின் சட்டையை பிடிக்கிறார். பின் முத்துவின் மனைவி பூக்கடை வைத்து இருப்பதாக முத்துவின் நண்பர் சொல்கிறார். பின் முத்துவுக்கே அந்த தலைவர் மாலை ஆர்டர் கொடுக்கிறார். முத்துவிடம் 20 ஆயிரம் ரூபாய் அட்வான்சும் கொடுக்கிறார். 


முத்து அட்வான்ஸ் பணத்தை கொண்டு வந்து மீனாவிடம் கொடுக்கிறார். இதைப்பார்த்து அண்ணாமலை சந்தோஷப்படுகிறார். மனோஜும் ரோகினியும் சாலையில் பேசிக் கொண்டு நடந்து செல்கின்றனர். அபோது மனோஜ் ”உன் அப்பா கிட்ட பணம் கேளு” என சொல்கிறார். ”முதல்ல நீ ஒரு வேலையில சேர்ந்து முழுசா 6 மாசம் வேலை செய் அதுக்கப்புறம் அதை பத்தி யோசிக்கலாம்” என சொல்கிறார். 


அப்போது மனோஜிக்கும் ரோகினிக்கும் சண்டை வந்து விடுகிறது. அப்போது பைக்கில் போகும் ரெண்டு பேர் வந்து ரோகினியை மடக்குகின்றனர். மனோஜ் ”எதற்கு வழி மறிக்கிறிங்க” என்று கேட்கின்றனர். அப்போது ரோகினி 4 வருஷத்துக்கு முன்னாடி பேங்கில் 4 லட்சம் லோன் வாங்கியதாகவும் அதை கட்டாமல் ஏமாற்றி விட்டதாகவும் சொல்கின்றனர். ரோகினியை ஃப்ராடு என்று சொல்லி திட்டுவதுடன் உன்னை ஜெயிலில் வச்சிடுவோம் என்று  அவர்கள் மிரட்டுகின்றனர். 


”நடுத்தெருவுல நின்னு எப்படி பேசிட்டு போறான் பாத்தியா அவமானமா இருக்கு” என்கிறார் மனோஜ். ”வித்யாவோட அம்மாவுக்கு மெடிக்கல் செலவுக்கு பணம் தேவைப்பட்டுச்சி அதுக்குதான் லோன் வாங்கினேன்” என்று சொல்லி சமாளிக்குறார் ரோகினி. ”உன்னை மாதிரி அப்பாவோட ரிட்டையர்மெண்ட் பணம் 27 லட்சத்தை எடுத்துட்டு போய்ட்டு எவக்கிட்டயோ குடுத்து ஏமாறல” என்கிறார் ரோகினி. மனோஜ் கோபத்தில் நிற்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. 


மேலும் படிக்க 


Minister Udhayanidhi Case: சனாதன பேச்சு வழக்கு: உதயநிதியின் அமைச்சர் பதவிக்கு செக்? இன்று தீர்ப்பு!