இன்றைய எபிசோடில், போதையில் இருக்கும் மனோஜ் எதுவும் பேசாமல் சிலை போல் அமர்ந்திருக்கிறார். விஜயா பாட்டியிடம் ”என் புள்ளைக்கு அந்த பழக்கம் எல்லாம் இல்லை. தோ நிக்குறான் பாரு இவனுக்கு தான் இந்த கண்றாவி பழக்கம் எல்லாம் இருக்குது” என்று சொல்லுகிறார். உடனே பாட்டி, “ முத்து இங்க இருக்கும் போது தான் பயலுகளோட சேர்ந்து திருட்டு தனமா போய் குடிப்ப, இப்பவும் இப்படி பன்ற” என கேட்கிறார். அதற்கு விஜயா, ”நீ எப்படியோ போய் தொலைடா என் புள்ளைய எதுக்குடா கூட்டிகிட்டு போன” என கேட்கிறார்.


ரவி முத்துவை அசைத்து ”டேய் என்னடா ஃப்ரீஸ் ஆன மாதிரி உட்கார்ந்துகிட்டு இருக்க? வாயை தொறந்து எதாவது பேசுடா” என சொல்கிறார். விஜயா, முத்துவை பார்த்து ”டேய் எதுவும் பேசாதடா நீதான் என் பையன ஏதோ பண்ணி இருக்க” என சொல்லுகிறார். மலேசியா மாமா முன்னாடி மானத்த வாங்குறிங்களே அவரு என்ன நினைப்பாரு என விஜயா சொல்லுகிறார். இந்த பிஸ்னஸ் மீட் எல்லாம் போகும் போது லைட்டா குடிப்பாங்களே அதுமாதிரிதான் கொஞ்சம் குடிச்சேன் என்கிறார் ப்ரெளன் மணி. 


”குடிக்கணும்னா நீங்க மட்டும் குடிக்க வேண்டியது தானே எதுக்கு அவரை குடிக்க வச்சிங்க” என ரோகினி ப்ரெளன் மணியிடம் கேட்கிறார். அதற்கு ப்ரெளன் மணி ”நான் வேண்டானுதான் சொன்னே முத்து மாப்பிளை தான் வலுக்கட்டாயமா ஊத்தி விட்டாரு” என சொல்கிறார் ப்ரெளன் மணி. ரோகினி, முத்துவிடம் ”நீங்க மட்டும் குடிக்க வேண்டியது தானே அவருக்கு ஏன் ஊத்தி விட்டிங்க அசிங்கமா இல்லையா?” என கேட்கிறார். பாட்டி முத்துவை அடிக்கிறார். அண்ணாமலைக்கு தெரிஞ்சா கஷ்டப்பட மாட்டான் எனக்கூறி பாட்டி அழுகிறார். 


போதையில் மனோஜ், விஜயா, பாட்டி, ரோகினி அனைவரையும் கட்டிப்பிடிக்கிறார். ரோகினி மனோஜை ரூமுக்குள் அழைத்துச் சென்று அடிக்கிறார்.  பின் விஜயாவும்- ரோகினியும் பேசுகின்றனர். அப்போது மனோஜூக்கு பிஸ்னஸ் வைத்து தர சொல்லி கேட்கிறார் விஜயா. ரோகினி எதையோ கூறி சமாளிக்குறார். ”இவங்க வேற சும்மா பிஸ்னஸ் வச்சிக்குடுனு கேட்டுகிட்டே இருக்காங்க. இவங்கள எப்படி சமாளிக்க போறேன்” என மனதிற்குள் நினைக்கிறார் ரோகினி. 


முத்து தனது நண்பருடன் பேசிக்கொண்டு இருக்கும் போது, ப்ரெளன் மணி, மனோஜிக்கு சரக்கு ஊத்தி விட்டது குறித்து கூறிக்கொண்டிருக்கிறார். இதை ரோகினி கேட்டு விடுகிறார். ப்ரெளன் மணியிடம் சென்று மனோஜிக்கு யாரு சரக்கு ஊத்தி விட்டது என கேட்கிறார். அதற்கு அவர் முத்து என சொல்ல, ரோகினி அவர் தலையிலேயே கொட்டு வைக்கிறார். பின் நாளைக்கு காலையிலே முதல்ல இங்க இருந்து கிளம்புங்க என கூறுகிறார். அதற்கு ப்ரெளன் மணி உங்க அத்தை வேற எனக்கு பிடிச்சதெல்லாம் சமைச்சி தர்றேன்னு சொல்லி இருக்காங்க என கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.