'Metti Oli' sisters reunion: மீண்டும் ஒன்று சேர்ந்த மெட்டி ஒலி சகோதரிகள்.. ரசிகர்கள் மகிழ்ச்சி

'Metti Oli' sisters reunion : மெட்டி ஒலி சீரியலில் நடித்த சகோதரிகள் 22 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து கொண்டனர். அவர்களின் ரீயூனியன் கிளிக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Continues below advertisement

"அம்மி அம்மி அம்மி மிதித்து...." சின்னத்திரை ரசிகர்களின் நினைவுகளில் என்றுமே முதலிடத்தை பிடித்த சீரியல் என்றால் அது எந்த ஒரு சந்தேகமும் இன்றி 'மெட்டி ஒலி' தான். 2002ம் முதல் சன் டிவியில் ஒளிபரப்பான இயக்குநர் திருமுருகனின் 'மெட்டி ஒலி' சீரியல் குடும்ப உறவுகளையும் அவர்களுக்குள் இருக்கும் சிக்கல்களையும் பந்தபாசத்தையும் அப்படியே கண்முன்னால் காட்சி படுத்திய ஒரு சீரியல். அன்றைய காலகட்டத்தில் அனைவரின் தினசரி பொழுதுபோக்கு அம்சமாக தொலைக்காட்சி தொடர்கள் தான் ஆக்கிரமித்தன. அதில் மிக முக்கியமான பங்கை 'மெட்டி ஒலி' கைப்பற்றியது. 

Continues below advertisement

 


ஐந்து சகோதரிகளும் அவர்களின் வாழ்க்கையும் பற்றின இந்த சீரியலில்  தனமாக காவேரி, சரோவாக காயத்ரி, லீலாவாக வனஜா, விஜியாக உமா மற்றும் பவானியாக ரேவதிப்ரியா அலங்கரித்தனர். இந்த சீரியல் சகோதரிகளின் ரீயூனியன் ஒன்று பல ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் நடைபெற்றது. இதில் காவேரி, வனஜா மற்றும் காயத்ரி கலந்து கொண்டனர். இவர்களின்  தங்கையாக விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்த உமா, கடந்த 2021ம் ஆண்டு உடல்நலக்குறைவால் காலமானார். கடைசி தங்கையாக நடித்த ரேவதி பிரியா கலந்து கொள்ளவில்லை. 

22 ஆண்டுகள் சேலஞ்சாக தற்போது 2024ம் ஆண்டு நடந்த இவர்களின் சந்திப்பின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பார்த்த ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தை கமெண்ட் மூலம் தெரிவித்து இருந்தனர். மெட்டி ஒலி சீரியலில் நடித்த அனைவருமே இன்று வரை அதன் நாஸ்டால்ஜி நினைவுகளை நினைவு கூர்ந்து வருகிறார்கள். அந்த சீரியலில் நடித்த நடிகர் நடிகைகள் பலருக்கும் அது ஒரு அடையாளமாகவே மாறியது. 

 

மெட்டி ஒலி சீரியலில் நடித்த டெல்லி குமார், சாந்தி வில்லியம்ஸ், சேத்தன், போஸ் வெங்கட், சஞ்சீவ், சண்முகசுந்தரி, தீபா ஷங்கர், திருச்செல்வம் என பலருக்கும் அவர்களின் கேரியரில் இந்த சீரியல் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. 

மெட்டி ஒலி சீரியலின் இயக்குநர், நடிகர்கள், தொழிநுட்ப கலைஞர் என அனைவருக்குமே அதன் வெற்றி போய் சேரும். மெட்டி ஒலி சீரியல் எந்த அளவிற்கு மனதோடு நெருக்கமாக இருந்ததால் தான் அந்த சீரியல்  மூன்று முறை தொலைக்காட்சியில் ரீ டெலிகாஸ்ட் செய்யப்பட்டது. அதே போல கொரோனா பேரிடர் காலகட்டத்தில், மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்த சமயத்தில், 'மெட்டி ஒலி' சீரியலை தொலைக்காட்சிகளில் ரீ டெலிகாஸ்ட் செய்த போதும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

இது போல மலரும் நினைவுகளை கொடுத்த 'மெட்டி ஒலி' தொடரின் சீசன் 2 எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இன்று வரை இருந்து கொண்டே தான் இருக்கிறது. சமீபத்தில் இது குறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது. இருப்பினும் அதிகாரபூர்வமான தகவலை இதுவரையில் இயக்குநர் திருமுருகன் தெரிவிக்கவில்லை. அதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நீடித்துக் கொண்டே தான் இருக்கிறது. 

Continues below advertisement