அனைவரும் பொங்கல் சாப்பிட்டு விட்டு அமர்ந்திருக்கின்றனர். அப்போது ரோகினி அனைவருக்கும் வெற்றிலை கொடுக்கின்றார். அப்போது ப்ரெளன் மணி மனோஜை பார்த்து ’என்ன மாப்பிளை வேலை எல்லாம் எப்படிப் போகுது’ என கேட்கிறார். அப்போது முத்து” வேலை தேடுற வேலை எப்படி போகுதுனு கேளுங்க” என்கிறார். ’அவன் ரொம்ப படிச்சிருக்கான், அவன் படிப்புக்கேத்த வேலை கிடைக்குறது ரொம்ப கஷ்டம், இல்லனா ஆயிரம் வேலை அவன தேடி வரும்” எனக் கூறுகிறார் விஜயா.


”நான் ஒரு பிஸ்னஸ் ஆரம்பிச்சா, பெருசா வளர்ந்துடுவேன்” என மனோஜ் சொல்கிறார். ”என்னை வேலை வாங்குற அளவுக்கு யாருக்குமே அறிவு இல்லை” என்றும் கூறுகிறார். ”ரோகினியோட அப்பாகிட்ட சொல்லி  எனக்கு ஒரு பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ண ஹெல்ப் பன்ன சொல்லுங்க அங்கிள்” என ப்ரெளன் மணியிடம் கூறுகிறார். அதற்கு அவர், ”ரோகினியோட அப்பா பெரிய பெரிய பிஸ்னஸ் எல்லாம் பண்ணிகிட்டு இருக்காரு. அவருக்கு இருக்குறது ஒரே வாரிசு. அவருக்கு அப்றம் எல்லாம் நீங்கதானே” என சொல்கிறார். 


”சம்பந்தி ரோகினியோட அப்பா எப்போ தான் இங்க வருவாரு” என அண்ணாமலை கேட்கிறார். ”ரோகினியோட அப்பாவுக்கு எப்பவும் பணம் பணம் தான். பொண்டாட்டிய கவனிக்காம விட்டுட்டாறு. சின்ன வயசுலயே உங்க அம்மா நம்மள எல்லாம் விட்டுட்டு போய்ட்டாங்க” என்கிறார். அவங்க ”அம்மா இறந்து போன சோகம் பாப்பாவுக்கு அப்படியே ஈரக்குலை நடுங்கிப் போச்சு” என்கிறார். ”ரோகினி அம்மா வேற இல்ல அவங்க இருந்து இருந்தா எல்லாம் செஞ்சிருப்பாங்க. என்ன பண்றது அவங்க தான் இறந்துட்டாங்களே” எனக்கூறுகிறார் ப்ரெளன் மணி. ”எங்க அம்மா ஒன்னும் சாகல ”என ஆவேசமாக பேசுகிறார் ரோகினி. பின் “என் மனசுல வாழ்ந்துகிட்டு இறக்குறத சொன்னேன்” எனக் கூறி சமாளிக்குறார்.


அனைவரும் அமர்ந்து கரும்பு சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்போது “ரோகினி ஆர் யூ ஆல்ரைட்” எனக் கேட்கிறார் ஸ்ருதி. ”நீ என்னை அத்தையா பார்க்காத அம்மாவா பாரு” என சொல்கிறார் விஜயா. அப்போது  “ஸ்ருதியும் எனக்கு பொண்ணு மாதிரி தான்” என விஜயா சொல்லுகிறார். ”எனக்கு இருக்குற அம்மாவே போதும். நீங்க எனக்கு ஆண்டியாவே இருங்க” என சொல்லுகிறார் ஸ்ருதி. இதைக் கேட்டு விஜயா அதிர்ச்சி அடைகிறார். “மூன்று மருமகள்களையும் ஒரே மாதிரு பாரு” என பாட்டி சொல்லுகிறார். 


ப்ரெளன் மணி எது பேசினாலும் கறியையே உதாரணமாக சொல்லுகிறார். ”கிராமத்தை போய்ட்டு சுத்தி பார்க்கலாம் எனச் சொல்லுகிறார் அவர். ஆடு தானா வந்து மாட்டுது எனக் கூறி ப்ரெளன் மணியை அழைத்துச் செல்கிறார் முத்து.  “பாப்பா அங்கேயும் கேமரா இருக்கும் இல்ல” எனக் கேட்கிறார் ப்ரெளன் மணி. கேமராவா என அதிர்ச்சியாகிறார் அண்ணாமலை. பின் ரோகினி போட்டோ எடுப்பதற்காக கேட்கிறார் எனக் கூறி சமாளிக்குறார். முத்து அவரின் நண்பன் மற்றும் மனோஜ் ப்ரெளன் மணிக்கு ஊரை சுற்றிக்காட்டிக் கொண்டிருக்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.