சிறகடிக்க ஆசை சீரியலின் இந்த வாரத்துக்கான ப்ரோமோ!


மீனா முத்துவுக்கு கால் பண்ணி மாமாவை பக்கத்துல இருக்குற ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிகிட்டு போய்ட்டு இருக்கேன் என்கிறார். அவருக்கு அங்கு ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. முத்து “அப்பா என்னச்சிப்பா உனக்கு?” என பதறிக்கொண்டு ஓடி வருகிறார். ”மஸ்கிட்டோஸ் ஸ்பிரே அடிச்சது இவருக்கு ஒத்துக்கல” என டாக்டர் முத்துவிடம் சொல்கிறார். ”சீரியஸா எதுவும் இல்ல இல்ல டாக்டர்?” எனக் கேட்கிறார் முத்து. அதற்கு டாக்டர் ”கொஞ்சம் லேட்டா வந்து இருந்தாலும் சீரியஸா ஆகி இருக்கும்” எனக் கூறுகிறார். 


“கவுண்டர்ல பில் பே பண்ணிடுங்க” என்று முத்துவிடம் சொல்லப்படுகின்றது. ”தாலியை வித்துடலாமா?” என மீனா கேட்கிறார். அதற்கு முத்து ”என்ன மீனா நீ, கட்டி ஒரு நாள் கூட ஆகல” என்கிறார். அண்ணாமலையை டிஸ்சார்ஜ் செய்து கூட்டி வந்து வீட்டில் உட்கார வைத்திருக்கின்றனர். ஸ்ருதி அண்ணாமலையிடம் ”சரியாகிடுச்சா?”  எனக் கேட்கிறார். அதற்கு முத்து ”ஏன் சரியாகக் கூடாதுனு நினச்சியா? என கேட்கிறார். ”இன்னைக்கே டிஸ்சார்ஜ் பண்ணிட்டங்கனா சின்ன ப்ராப்ளம் தானே” என்கிறார் ஸ்ருதி. 


”ஏன் பெரிய ப்ராப்ளம் வரணும்னு ப்ளான் போட்டியா?” எனக் கேட்கிறார் முத்து. அதற்கு ஸ்ருதி வாட்? என அதிர்ச்சியாக கேட்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. அண்ணாமலைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட போது, மீனா மட்டுமே வீட்டில் இருந்ததால், விஜயா மீனாவிடம் இதுதொடர்பாக வலிய வந்து வம்பிழுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  சிறகடிக்க ஆசை சீரியல் தொடங்கியது முதலே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. கதைக்களம் தொய்வில்லாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது. ரோகினி தனக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து மனோஜை திருமணம் செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். 


மேலும் தன் அப்பா மலேசியாவில் வேலை பார்ப்பதாகவும், மேலும் அவர் ஒரு பெரிய தொழிலதிபர் என்றும் பொய் சொல்லி இருக்கிறார். இந்தப் பொய்யை மறைப்பதற்காக ப்ரெளன் மணி என்பவரை தன் மாமாவாக நடிக்க வைத்தார். இப்படி ஒரு பொய்யை மறைக்க ரோகினி அடுக்கடுக்காக பொய்களை சொல்லி இருக்கின்றார். விஜயாவும் ரோகினி பணக்காரி என நம்புவதுடன் அவருக்கு பயங்கரமாக சப்போர்ட் செய்கிறார். மேலும் மீனாவை எப்போதும் மட்டம் தட்டி பேசிக்கொண்டிருக்கிறார் விஜயா. எனவே ரோகினி எப்போது வீட்டில் சிக்குவார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.


மேலும் படிக்க 


Akash Murali: மீண்டும் தமிழுக்கு திரும்பும் விஷ்ணுவர்தன்: ஹீரோவாக அறிமுகமாகும் ஆகாஷ் முரளி!


Today Movies in TV, February 11: மன்னன் முதல் மாஸ்டர் வரை! டிவியில் இன்று ஒளிபரப்பாகும் படங்களின் முழு விபரம்!