விஜய் டிவியின் 2 முக்கிய சீரியல்களின் நேரம் அதிரடி மாற்றம்; முழு விவரம் இதோ!
விஜய் சீரியலில் ஒளிபரப்பாகும் முக்கியமான சீரியலின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி வரும் திங்கள் முதல் இந்த மாற்றம் இருக்கும் என்று தகவல் தகவல் வெளியாகியிருக்கிறது.

சன் டிவியில் கிட்டத்தட்ட 20 சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அதற்க்கு போட்டியாக விஜய் டிவியில் மொத்தம் 10 சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது பனி விழும் மலர்வனம், மகாநதி, சின்ன மருமகள், பொன்னி, சக்திவேல், தங்கமகள் இல்லம், நீ நான் காதல், தனம், சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, பாக்கியலட்சுமி, அய்யனார் துணை, மகாநதி, கண்மணி அன்புடன், சிந்து பைரவி, ஆஹா கல்யாணம் போன்ற ஒவ்வொரு சீரியலும், தனித்துவமான கதைக்களத்தில் உருவாகி உள்ளது.
இந்த சீரியல்களை பார்த்து ரசிப்பதற்கும், ஏராளமான ரசிகர்கள் பட்டாலும் உள்ளது. அதே போல் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப சீரியலின் வருகையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

ஏற்கனவே விஜய் டிவியில் தனம் மற்றும் அய்யனார் துணை என்ற 2 புதிய சீரியல்கள் தற்போது ஒளிபரப்பாக துவங்கியுள்ளது. எனவே தற்போது TRP ரேட்டிங்கை குறிவைத்து ஒரு சில சீரியல்களின் நேரம் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி 2 சீரியல்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இதே போல் எதிர்நீச்சல் மதுமிதா நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியல் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது. இந்த 2 சீரியல்களின் நேரம் மாற்றம் வரும் திங்கள் முதல் இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. மற்ற சீரியல்கள் வழக்கம் போல் ஒளிபரப்பாகி வரும் அதே நேரத்தில் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.