புதுமைக்கு பெயர் போன விஜய் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோகளுக்கு எந்த அளவு வரவேற்பு உள்ளதோ அதே அளவிற்கு சீரியல்களுக்கும் ஏராளமான ரசிகர் கூட்டம் உள்ளது. அப்படி 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு கூட்டு குடும்பத்தின் கதை தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். கடந்த ஐந்து ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது.

கடைசி நாள் படப்பிடிப்பின் போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஒட்டுமொத்த குழுவினரும் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினர். இந்த சீரியலுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குறிப்பாக பேமிலி ஆடியன்ஸ் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.



பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஸ்டாலின் முத்து, சுஜிதா, வெங்கட் ரெங்கநாதன், ஹேமா சதீஷ், குமரன் தங்கராஜன், லாவண்யா, சரவணா விக்ரம், விஜே தீபிகா, ஷாந்தி வில்லியம்ஸ், ரோசரி, மீனா செல்லமுத்து என ஏராளமானோர் நடித்து இருந்தனர். 

 

 

கூட்டு குடும்பத்தின் கதை:

 

ஒரு கூட்டு குடும்பத்தை சேர்ந்த நான்கு சகோதரர்கள் அவர்களது மனைவிகள் ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்து வரும் போது ஏற்படும் சில நிகழ்வுகள், சந்திக்கும் சில பிரச்சினைகள் அதை எப்படி அவர்கள் எதிர்கொள்கிறார்கள் என்பது தான் இந்த சீரியலின் கதைக்களம். ஒரு கூட்டு குடும்பத்தின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் உணர்த்திய இந்த அழகான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை பார்த்து பிரிந்து வாழ்ந்த ஏராளமான குடும்பங்கள் ஒன்று சேர்ந்துள்ளன.

ஏராளமான மாற்றங்கள்: 


முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜே சித்ராவுக்கு இந்த சீரியல் மிகப்பெரிய டர்னிங் பாயிண்டாக அமைந்தது. ஆனால் அவரின் எதிர்பாராத  இழப்புக்கு பிறகு முல்லை கதாபாத்திரத்தில் காவியா அறிவுமணி சில காலம் நடித்து வந்தார். பின்னர் அவரும் சினிமா வாய்ப்புகளால்  பிஸியாகவே தற்போது லாவண்யா அந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதைப்போலவே ஐஸ்வர்யா கதாபாத்திரத்திலும் பல மாற்றங்கள் இருந்தது.

இறுதி நாள் படப்பிடிப்பு :


சில மாதமாக கதைக்களம் எதை நோக்கி செல்கிறது என்றே புரியாமல் பார்த்து வந்த ரசிகர்களுக்கு ஈர்ப்பு குறையவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை முடித்துவிட திட்டமிட்டனர் குழுவினர். அந்த வகையில் இந்த சீரியலின் இறுதி நாள் படப்பிடிப்பும் படக்குழுவினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து புகைப்படங்கள் எடுத்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடினர்.

கன்பார்ம் எண்டு கார்டு:

 
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கடைக்குட்டி தம்பி கண்ணனாக நடித்து வரும் சரவண விக்ரம் தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக என்ட்ரி கொடுத்துள்ளதால் அவர் மட்டும் மிஸ்ஸிங். மற்ற நடிகர் நடிகையர் அனைவரும் சோசியல் மீடியாவில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள். இதன் மூலம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கன்பார்மாக முடிவுக்கு வரப்போகிறது என்பது உறுதியாகியுள்ளது.

விரைவில் இதன் இரண்டாம் பாகம் உருவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அதிகாரபூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை. 

கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்த மாற்றமும் இன்றி 8 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை நிச்சயம் ரசிகர்கள் மிகவும் மிஸ் செய்வார்கள்.