Pandian Stores 2: எம்டனாக மாறிய ஸ்டாலின் முத்து... உறவுகளுக்குள் விரிசல்...  குதூகலமாக தொடங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2...  

Pandian Stores 2 : உறவுகளுக்குள் ஏற்பட்ட விரிசலால் எதிரும் புதிருமாக இருக்கும் இரு குடும்பங்கள். நேற்று முதல் ஆரம்பமானது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 .

Continues below advertisement

விஜய் டிவியில் கடந்த 2018ம் ஆண்டு முதல் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த 5 ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்தது. ஸ்டாலின், சுஜிதா, ஹேமா, குமரன், வெங்கட், லாவண்யா, சரவண விக்ரம், விஜே தீபிகா என நான்கு அண்ணன் தம்பிகளுக்கு இடையில் இருக்கும் பாச பிணைப்பு, கூட்டு குடும்பத்துக்குள் நடக்கும் கதையை மையமாக வைத்து ஒளிபரப்பானது. குடும்ப ஆடியன்ஸை வெகுவாக கவர்ந்த இந்த சீரியல் கடந்த வாரத்துடன் நிறைவு பெற்றதை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அக்டோபர் 30ம் தேதியான இன்று முதல் துவங்கியுள்ளது. திங்கள் முதல் சனி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

Continues below advertisement

 

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 (Pandian Stores 2) சீரியல் அப்பா - மகன்களுக்கு இடையே நடக்கும் பாச போராட்டம் தான் கதைக்களம். ஸ்டாலின் முத்து தான் கதையின் நாயகன். அவரின் மனைவி கோமதியாக நிரோஷா நடிக்க இந்த தம்பதியினருக்கு மூன்று மகன் ஒரு மகள். மூத்த மகனாக வி.ஜே. கதிர்வேல் கந்தசாமி, இரண்டாவது மகனாக வசந்த் வசி மற்றும் மூன்றாவது மகனாக ஆகாஷ் பிரேம்குமார் நடிக்கிறார்கள். இந்த தம்பதியினருக்கு ஒரே ஒரு செல்ல மகள். வீட்டிலேயே இருக்கும் கோமதியின் தம்பி பழனியாக ராஜ்குமார் மனோகரன் நடிக்கிறார்கள். 

பிள்ளைகள் மீது மிகுந்த பாசம் கொண்ட கண்டிப்பான அப்பாவாக மிகவும் கரடு முரடாக நடித்துள்ளார் ஸ்டாலின் முத்து. இதுவரையில் அமைதியான ஒரு கதாபாத்திரமாக பார்க்கப்பட்ட ஸ்டாலின் முத்து இந்த சீசனில் எம்டன் நாசர் போல ஸ்ட்ரிக்ட் ஆபிஸராக இருக்கிறார். குடும்ப பகை காரணமாக எதிரே வீட்டில் இருக்கும் சக்திவேல், முத்துவேல் குடும்பத்துடன் எந்நேரமும் சண்டையிடும் ஒரு கேரக்டராக சித்தரிக்கப்பட்டுள்ளார். 

மனைவி கோமதியின் மூத்த அண்ணன் தான் முத்துவேல். அனைவருக்கும் மிகவும் பிரபலமான அஜய் ரத்னம் தான் முத்துவேல் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரின் தம்பியாக சக்திவேல் கதாபாத்திரத்தில் பாண்டி ரவி நடிக்கிறார். இந்த சகோதர்களின் தாயக ஸ்ரீலேகா ராஜேந்திரன் நடிக்கிறார். 

 


உறவுகளுக்குள் ஏற்பட்ட விரிசலால் எதிரும் புதிருமாக இருக்கும் இரு குடும்பங்கள். இந்த இரு குடும்பங்களுக்குள் ஏற்படும் மோதல், காதல், பகை தான் கதைக்களமாக இருக்க போகிறது. மீண்டும் ஒரு குடும்ப சப்ஜெக்டை கையில் எடுத்துள்ள இந்த சீசன் 2 நிச்சயமாக முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை மிஞ்சும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Continues below advertisement