விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய (அக்டோபர் 30) எபிசோடில் ஈஸ்வரி பாக்கியாவிடம் பேசிக்கொண்டு இருக்கிறார். "அவ இனிமேல் இங்க தான் இருப்பாளா?" என ராதிகாவை பற்றி ஈஸ்வரி கோபியிடம் கேட்டு கொண்டு இருக்கிறார். "இப்படி பிரச்சினை எல்லாம் வரக்கூடாது என்பதற்காக தான் வரமாட்டேன் என சொன்னேன்" என்கிறார் கோபி. இவர்கள் பேசி கொண்டு இருக்கும் போது பாக்கியா வந்து ஈஸ்வரியிடம் கோயில் அன்னதானத்திற்கு ஆர்டர் கிடைத்து இருப்பது பற்றி சொல்கிறாள். செல்வியையும் காலையில் சீக்கிரமாக வர சொல்லி விட்டு செழியன் வீட்டுக்கு வராததால் அவனுக்கு போன் செய்து பார்க்கிறாள்.
மாலினியும் செழியனும் தனியாக பேசிக்கொண்டு இருப்பதை செல்வி பார்த்துவிட்டு பாக்கியாவிடம் போய் சொல்கிறாள். மாலினி கிளம்பியதும் பாக்கியா செழியன் முன்னாடி போய் நின்று அதிர்ச்சி கொடுக்கிறாள். "என்னதான் நடக்குது உங்களுக்குள்ள? உண்மையை சொல்லு... நீ ஆபிசுக்கு போறதே இல்லை என எனக்கு தெரியும்" என்கிறாள் பாக்கியா. செழியன் பாக்கியாவை கட்டியணைத்து கொண்டு அழுகிறாள். "அவ என்னை மிரட்டுறா. இப்ப கூட உன்கிட்ட உண்மையை சொல்லிடுவேன் என சொல்லி தான் இங்க வர வச்சா. ஆபிஸ் வேலையா தான் முதலில் நான் அவளிடம் பழகினேன். பின்னாடி அவ மேல பரிதாபப்பட்டு அவளுடன் பேச ஆரம்பித்தேன். இப்போ சைக்கோ மாதிரி என்னை மிரட்டுறா" என செழியன் சொல்கிறான். ஒரு பொண்ணு தேவையில்லாம எதுக்கு மிரட்டணும். "உண்மையை சொல்லு... நீ ஏதாவது தப்பு பண்ணியா?" என பாக்கியா கேட்க "கடவுள் சத்தியமா நான் எந்த தப்பும் பண்ணல" என செழியன் சொல்ல "நீ வீட்டுக்கு கிளம்பு நான் பாத்துக்குறேன்" என சொல்லி செழியனை வீட்டுக்கு அனுப்பி வைக்கிறாள் பாக்கியா. அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) எபிசோட் முடிவுக்கு வந்தது.