விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்' பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலானது அரசி மற்றும் குமரவேல் திருமணத்திற்கு பிறகு விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது. தன்னையும், தனது குடும்பத்தையும் பழி தீர்க்க நினைத்த குமரவேலுவை, அரசி பழி தீர்க்க தனக்கு தானே தாலி கட்டிக் கொண்டு அவரது வீட்டிற்கே சென்றுள்ளார்.
திருமணத்திற்கு பிறகு இருவரும் எலியும், பூனையூமாக சண்டை போட்டு வருகிறார்கள். அரசியை தன்னுடைய வாழ்க்கையில் இருந்து துரத்தி அடிக்க வேண்டும் என நினைக்கும் குமரவேல், அரசி தனக்கு தானே தாலி கட்டிக் கொண்டதை எப்படியாவது வெளியே சொல்ல வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் தான் ராஜீ தனது அப்பாவிடம் குமரவேல் அரசியை கொடுமைப்படுத்தினால், தன்னை கதிர் கொடுமைப்படுத்துவான் என்று கூறினார். இதைத் தொடர்ந்து அரசி மற்றும் குமரவேல் சண்டையிட்டுக் கொண்டிருந்த போது கதவிற்கு பக்கத்தில் வந்த நின்ற முத்துவேல் அவர்கள் பேசியதை கேட்டாரா இல்லையா என்பது பற்றி தெரியவில்லை. உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்று குமரவேலுவை அழைத்துச் சென்ற முத்துவேல் அவருக்கு அறிவுரை வழங்கினார்.
பாண்டியனை பழி வாங்க அவரது மகளை காதலித்து கல்யாணமும் பண்ணிக்கிட்ட. இனிமேல் நீ நல்லவனாக உன்னுடைய மனைவிக்கு அன்பான கணவனாக நடந்து கொள்ள வேண்டும் என்றார். ஆனால் ஏன் அப்படி சொல்கிறார், எதற்கு அப்படி சொல்கிறார் என்று குமரவேலுவிற்கு புரியவில்லை. ஆனால், சக்திவேலுவிற்கு நன்றாக புரிந்துவிட்டது.
இதைத் தொடர்ந்து சக்திவேல் மற்றும் முத்துவேல் இருவரும் ஒருவேளையாக வெளியில் வந்த போது எதிர்பாராத விதமாக பாண்டியனை சந்தித்து பேச வேண்டிய நிலை ஏற்பட்டது. அதில், முத்துவேல், யாராக இருந்தாலும் வீட்டிற்கு வந்த பொண்ணை கொடுமைப்படுத்தக் கூடாது. உன்னுடைய மகளுக்கு எதுவும் ஆகாது, அதே போன்று என்னுடைய மகளுக்கும் எந்த பிரச்சனையும் வரக் கூடாது. ஏதாவது ஒன்னு ஆச்சு, நான் சும்மாவே இருக்கமாட்டேன் என்று முத்துவேல் கோபத்துடன் பேசினார்.
இதைத் தொடர்ந்து கல்யாணமாகி வீட்டிற்கு வந்ததிலிருந்து 4 புடவையை மாறி மாறி கட்டிக் கொள்கிறேன், எனக்கு புடவை எடுத்துக் கொடுங்க என்று அரசி கேட்க, முடியாது என்று குமரவேல் மறுக்கவே வேறு வழியில்லாமல் தனது மூத்த மாமனாரான முத்துவேலுவிடம் அரசி தனக்கு டிரஸ் எடுத்து தரச் சொல்லுங்க என்று சொல்லிவிட்டார். குமரவேலுவும் பெரியப்பா சொல்லிவிட்டாரே என்று வேண்டா வெறுப்பாக அர்சியுடன் சேர்ந்து டிரஸ் எடுக்க சென்றுள்ளார். அங்கு கடையில் வைத்து இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.