விஜய் டிவியில் இன்று (அக்டோபர் 22)  ஒளிபரப்பான நீயா? நானா? நிகழ்ச்சி  சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தையே ஏற்படுத்தியுள்ளது. 


காலம் கடந்தாலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கு இருக்கும் மவுசு என்றும் குறையாமல் தான் இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு தான் ஒவ்வொரு சேனல்களும் விதவிதமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றன. சீரியல்கள் தான் என்றும் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றதாக உள்ளது. அதனைத் தாண்டி காமெடி, விவாதம் மற்றும் நடன ரியாலிட்டி நிகழ்ச்சிகள் உள்ளது. அந்த வகையில் பார்வையாளர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாக “நீயா..நானா” உள்ளது. 


கோபிநாத் இந்த நிகழ்ச்சியை  பல ஆண்டுகளாகவே தொகுத்து வழங்கி வரும் நிலையில் வாரா வாரம்  விதவிதமான தலைப்பில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். இதில் பகிரப்படும் கருத்துகள் அனைத்து சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த வாரம் (அக்டோபர் 22) சொந்தத்தில் திருமணம் செய்பவர்களை ஆதரிப்பவர்கள் vs  எதிர்ப்பவர்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இதில் இருபக்கமும் வயது வித்தியாசமில்லாமல் ஆண்கள், பெண்கள் பங்கேற்றனர். 


அதில் பேசும் ஒரு பெண், என்னோட அத்தையும், மாமாவும் அந்த உறவாகவே இருக்க வேண்டும். மாமனார், மாமியார் ஆகிவிட்டால், முன்பு செல்ல மருமகளா இருந்த நான் கல்யாணம் ஆன பிறகு வேறு ஒரு பார்வையில் பார்க்கப்படுவேன். அது ஒரு அத்தையோடு முடியாது. மத்த அத்தைகள் கிட்டேயும் போகும். நம்ம அண்ணன் பொண்ணு தானே என்று அட்வைஸ் பண்ணுவாங்க என தெரிவிக்கும் காட்சிகள் கொண்ட ப்ரோமோ வெளியானது. 






இதில் பேசிய விவாதங்களை விட, சமூக வலைத்தளங்களில் நீயா நானா வீடியோவை பதிவிட்ட பிறகு, இணையவாசிகள் பதிவிட்ட கமெண்டுகள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.



  • “தப்பி தவறிகூட சொந்தத்துல கல்யாணம் பண்ணிக்காதேங்க....வாழ்க்கை போர்க்களமாக போய்விடும்...அனுபவத்தில் சொல்கிறேன்”. 

  • யாரை கல்யாணம் பண்ணாலும் பிரச்சனை தான்.

  • வேண்டவே வேண்டாம். சொந்தத்தில திருமணம் பண்ணுனா மானம், மரியாதை நிம்மதி சந்தோஷம்னு ஒண்ணும் இருக்காது.  நானும் அதே நிலையில் தான் இருக்கிறேன். 

  • நா தான் தப்பு பண்ணிட்டேன். அதை பையன் கிட்ட மாட்டிட்டேன். 

  • விட்டுக் கொடுப்பதும்.. சரியாகப் புரிந்து கொள்வதுமே கூட்டுக்குடும்பம்” என கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.